பக்கம் எண் :

கார்காலப் படலம் 403

நம்மனோர்க்குச் சிறந்தது' என்று;வலிக்கும் வன்மையோர் -உறுதியாக
நினைக்கும் வலிமை உடையவர்கள்.  திறத்து உறை நல்நெறி -(அவர்கள்
அவ்வாறு) நிலைத்த பேறுடைய நல்ல நெறியிலிருந்து;திறம் பல் உண்டு
எனின் -
தவறுதல் உள்ளது என்றால்;புறத்து இனி -அப்பால்;புகழும்
வாகையும் -
புகழும் வெற்றியும்;யார் திறம் -யாரிடத்தில் சேரும்?
(அறநெறி பிழையாத உன்னையே சேரும்).

     அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்பது உறுதியாதலின் ஆற்றல்
உடையராயினும் அரக்கர்கள் அறநெறி தவறியவர்களாதலின் அவர்கள்
பழியையும் தோல்வியையும் பெற்று அழிய, அறவழியில் நடக்கும் இராமனுக்கே
புகழும் வெற்றியும் வந்து சேரும் எனக் காரணம் காட்டித் தேறுதல் கூறினான்.
'புறத்தினி யார் திறம் புகழும் வாகையும்' என வெற்றியின் உறுதியை
வற்புறுத்திக் காட்டினான் இளவல்.  ''பாவம் தோற்றது, தருமமே வென்றது
இப்படையால்'' (4444), 'வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்?'
(5144) என்பன ஒப்புநோக் கத்தக்கன.  ''கடஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய
கலிமாவும், நெடுங் கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும்' என
நான்குடன் மாண்டதாயினும் மாண்ட, அறநெறி முதற்றே அரசின் கொற்றம்'
(புறம் - 55) என்றதும்காண்க.                                    101

4249.'பைந்தொடிக்கு இடர் களை
      பருவம் பையவே
வந்து அடுத்துளது; இனி,
     வருத்தம் நீங்குவாய்;
அந்தணர்க்கு ஆகும் நாம்,
      அரக்கர்க்கு ஆகுமோ? -
சுந்தரத் தனு வலாய்! -
      சொல்லு, நீ' என்றான்.

     பைந்தொடிக்கு இடர்களை பருவம் -பசும்பொன்னாலாகிய
தொடியணிந்த பிராட்டிக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குதற்குரிய காலம்;
பையவே வந்து அடுத்துளது -
மெல்லவே வந்து சேர்ந்துளது;இனி
வருத்தம் நீங்குவாய் -
(அதனால்) இனிமேல் துன்பத்தைத் தவிர்ப்பாய்.
அந்தணர்க்கு ஆகும் நாம் -முனிவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ள
நாம்;அரக்கர்க்கு ஆகுமோ -அரக்கர்களுக்கு இலக்கு ஆவோமா?  சுந்
தரத்  தனு வலாய் -
அழகிய விற்போரில் வல்லவனே!நீ சொல்லு -நீ
சொல்வாயாக;என்றான் -என்று (இலக்குவன்) கேட்டான்.

     கூதிர்ப்பருவத்திற்கு அடுத்து வரும் பருவம் சீதையின் துன்பத்தைத்
நீக்கும் பருவமாகும் என்பதால் 'இடர்களை பருவம்' என்றான்.  இடர்
களைதலாவது இராவணைன் கொன்று சீதையை மீட்டலாகும்.  பருவம்
வந்துளது என்னாது பருவம் வந்து அடுத்துளது என்ற நயம் காண்க.
அதற்கேற்ப அடுத்த பாடலில் 'அறுதியை அடைந்தது அப்பருவம்' என்றான்.
''முனிவர்களுக்குத் தீங்கு செய்கிற அரக்கர்களை அழித்து அவர்கட்கு
உதவியாக இருக்கவேண்டிய நாம் அரக்கர்கள் செய்யும் துன்பங்களில்
ஆழ்ந்துவிடுதல் தகுதியோ? அவ்வாறு துன்பத்தால் சோர்கையில்
அந்தணர்களுக்கு உதவவும் இயலாது போய்விடுமன்றோ' எனத் தேறுதல்