விடுத்து;அவண் இயன்றன -அவ்விடத்திருந்த கரைகளில் வந்து பொருந்தினவாய்;இளவெயில் ஏய்ந்த மெய்யின -இளவெயில் படியும் உடம்புகளை உடையனவாய்;தடங்கள் தோறும் -நீர்நிலைகளின் கரைகளிலெல்லாம்;வயின்தொறும் வயின்தொறும் -இடந்தோறும் இடந்தோறும் (பற்பல இடங்களில்);மடித்த வாயின -மடித் வாய்களை உடையனவாய்;துயின்றன -உறங்கின. மழைக்காலத்தில் நீரில் மூழ்கிக் கிடந்த முதலைகள், மழை நீங்கியதும் நீர் நிலைகளை விட்டுக் கரையில் வந்து வெயிலில் குளிர் காய்வது இயல்பாகும். முதலைகள் தூங்குகையில் வாய் மடித்துத் தூங்கும் இயல்பு உணர்த்த 'மடித்த வாயின துயின்றன' என்றார். இடங்கர் என்பது முதலை வகைகளில் ஒன்று. 'கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்' (குறிஞ்சிப் - 257) என்ற இடத்து நச்சினார்க்கினியர் இவை மூன்றும் சாதிவிசேடம் என்றது காண்க. வயின்தொறும் வயின்தொறும் - அடுக்குத்தொடர் பன்மை உணர்த்திற்று. 118 | 4266. | கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின, அஞ்சிறை அறுபத அளக ஓதிய, எஞ்சல் இல் குழையன, இடை நுடங்குவ - வஞ்சிகள் பொலிந்தன, மகளிர் மானவே. |
வஞ்சிகள் -வஞ்சிக் கொடிகள்;கொஞ்சுறு கிளி -கொஞ்சிப் பேசுகின்ற கிளிகளின்;நெடுங் குதலை கூடின -நீண்ட மதலைமொழி கள் (தம்மிடத்துப்) பொருந்தப் பெற்றனவாய்;அஞ்சிறை அறுபதம் -(தம்மிடம் மொய்க்கின்ற) அழகிய சிறகுகளை உடைய வண்டுகளாகிய;அளக ஓதிய - கூந்தலின் ஒழுங்கையுடையனவாய்;எஞ்சல் இல் குழை யன -குறைவில்லாத தளிர்களை உடையனவாய் (குறைவில்லாத குழை யெனும் காதணி உடையனவாய்);இடை நுடங்குவ -இடையில் ஒல்கி அசைவனவாய் (இடை, அசைவனவாய்);மகளிர் மான -மகளிரைப் போல;பொலிந்தன - விளங்கின. வஞ்சிக்கொடிகள் மகளிர் போல விளங்கின என்பதாம். வஞ்சிக்கொடியில் கிளிகளின் மொழி மகளிர் குதலை போன்றும், மலரில் மொய்க்கும் வண்டுகள் மகளிர் கூந்தல் போன்றும், அழகு குறையாத குழை (தளிர்) குழையணியாகவும் வஞ்சிக் கொடியின் நடுப்பகுதி துவளுதல் மகளிர் இடை துவளுதல் போலவும் இருந்தன. குழை - தளிர், காதணி என்று இருபொருள்பட நின்றது. இடை - நடுப்பகுதி, மகளிர்இடை என இரு பொருள்பட்டு நின்றது. எனவே, உருவகத் தையும் சிலேடையையும் உறுப்பாகக் கொண்ட உவமை அணியாகும். அறுபதம் - வண்டு, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. குதலை - மகளிரின் எல்லாப் பருவத்திற்கும் கூறப்படும்மொழிநிலை. 119 | 4267. | அளித்தன முத்துஇனம் தோற்ப, மான் அனார் வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி, மேன்மையால் |
|