பக்கம் எண் :

428கிட்கிந்தா காண்டம்

விளங்குவான், வைகுவான், மயங்கினான், தயங்குவான் (4286 - 4290) என்ற
சொற்கள் கிடந்தனன் (4291) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும்.   18

4287.தெள்ளியோர் உதவ, பெருஞ்
      செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம்
     களித்தான்; கதிர்ப்
புள்ளி மா நெடும் பொன்
      வரை புக்கது ஓர்
வெள்ளி மால் வரை
      என்ன விளங்குவான்.*

     தெள்ளியோர் உதவ -தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால்
வழங்கப்பெற்ற;பெருஞ்செல்வமாம் -பெரிய அரசாட்சிச் செல்வமாகிய;
கள்ளினால் அதிகம் களித்தான் -
கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக்
களிப்பில் மிதந்தவனாய்;கதிர்ப்புள்ளி -ஒளிக்கற்றைகளின்
சேர்க்கையையுடைய;மாநெடும் பொன் வரை -மிகப்பெரிய பொன்னிற
மாலையில்;புக்கது -புகுந்து தங்கக் கூடிய;ஓர் வெள்ளி மால் வரை
என்ன -
ஒரு பொய வெள்ளி மலை போல;விளங்குவான் -
விளங்குபவனும்.

     களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் 'கள்' என்றார்.
சுக்கிரீவன், ஆட்சிச் செல்வத்தைத் தானாகப் பெறவில்லை.  இராமலக்குவரின்
உதவியால் பெற்றான்.  இதனைத் 'தெள்ளியோர் உதவ' என்றதனால்
விளக்கினார்.  'செல்வமாம் கள்' - செல்வத்தால் ஆகும் மயக்கம்.

     வெண்ணிறமுள்ள சுக்கிரீவனுக்கு வெள்ளி மலையையும், பொன்னிறக்
கட்டிலுக்கு (அரண்மனை)ப்பொன்மலையையும் உவமையாக்கினார்.  'பொன்
வரை புக்கதோர் வெள்ளி மால் வரையென்ன விளங்குவான்' - இல்பொருள்
உவமை.                                                     19

4288.சிந்துவாரத் தரு, நறை, தேக்கு, அகில்,
சந்தம், மா மயிற் சாயலர் தாழ் குழல்
கந்த மா மலர்க் காடுகள், தாவிய
மந்த மாருதம் வந்து உற, வைகுவான்.

     சிந்துவாரத் தரு-கருநொச்சி மரம்;தேக்கு, அகில், சந்தம் -தேக்கு,
அகில், சந்தன மரங்கள்;மா மயிற் சாயலர் -சிறந்த மயில் போன்ற
சாயலையுடை பெண்களின்;தாழ்குழல் -நீண்ட கூந்தல்;கந்த
மாமலர்க்காடுகள் -
(கூந்தலில் சூடிய) மணமுள்ள மலர்களின் தொகுதி;
(ஆகிய இவற்றில்);தாவிய மந்தமாருதம் -தழுவிய மென்காற்று;வந்து உற
வைகுவான் -
வந்து தன்மேல் வீசத் தங்குபவனும்,