கரு நொச்சி முதலியவற்றில் தோய்ந்து வருவதால் நறுமணம் கொண்ட மென்காற்றுத் தன்மேல் வீசச் சுக்கிரீவன் தங்கியுள்ளான் என்பது. மந்தமாருதம்: இளந்தென்றல். 20 4289. | தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர் முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன், பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால், மத்த வாரணம் என்ன மயங்கினான்; |
தித்தியாநின்ற - தித்திக்கின்ற;செங்கிடை வாய்ச்சியர் -செங்கிடை போலச் சிவந்த இதழ்களையுடைய பெண்களின்;முத்த வாள் நகை - முத்துப்போல வெண்ணிறமான புன்னகை செய்கின்ற;முள் எயிற்று - கூர்மையான பற்களிலிருந்து;ஊறுதேன் -சுரக்கின்ற தேன்;பித்தும் மாலும்-பித்தினையும் மயக்கத்தையும்;பிறவும் -காமம், மதம், மறதி, சோர்வு, துயில்முதலிய தாமசக் குணச் செயல்களையும்;பெருக்கலான் - மிகுதிப்படுத்துவதனால்;மத்த வாரணம் என்ன -மதங்கொண்ட யானைபோல;மயங்கினான் -அறிவு அழிந்தவனும். சுக்கிரீவன், மகளிரின் இதழ் அமுதத்தை என்றைக்கும் சுவை தருவதெனக் கருதி மயங்கிக் கிடந்தான் என்பது. செங்கிடை என்பது சிவந்த நிறம் உடைய ஒருவகை நெட்டி. தேன் - உவமையாகுபெயர். - தித்தியா நின்ற தேன் என இயைக்கவும். 21 4290. | மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால், பகலவன் சுடர் பாய் பனி மால் வரை தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான். |
மகுட குண்டலம் ஏய் -மகுடமும் குண்டலங்களும் பொருந்திய;முக முண்டலத்து -முகமண்டலத்திலிருந்து;உகும் நெடுஞ்சுடர்க் கற்றை -வீசும் மிகுதியான ஒளியின் தொகுதி;உலாவலால் -(வெண்மை யான உடம்பு முழுவதும்) பரவுவதால்;பகலவன் சுடர்பாய் -சூரியனது கதிர்கள் பரவிய; மால்பனி வரை தக -மிக்க பனி படர்ந்த இமய மலையைப்போல;மலர்ந்து பொலிந்து -மலர்ச்சியுற்றுப் பொலிவோடு;தயங்குவான் -விளங்குபவனுமாய். சூரியனது கதிர்கள் பரவுகின்ற இமயமலையைப் போன்று சுக்கிரீவன் விளங்கினான் என்பது உவமையணி. 22 அங்கதன் சுக்கிரீவனைத் துயிலெழுப்புதல் 4291. | கிடந்தனன் - கிடந்தானைக் கிடைத்து இரு |
|