| தடங் கை கூப்பினன், தாரை முன்நாள் தநத மடங்கல் வீரன், நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான், அவனைத் துயில் நீக்குவான். |
கிடந்தனன் -(சுக்கிரீவன்) தூங்கிக் கொண்டிருந்தான்;கிடந் தானை - (அவ்வாறு) படுத்திருந்தவனான அவனை;தாரை முன்நாள் தந்த - தாரை முன்னாளில் பெற்றெடுத்த;மடங்கல் வீரன் -ஆண் சிங்கம் போன்ற வீரமுடைய அங்கதன்;கிடைத்து -நெருங்கிச்சென்று;இரு தடக்கை கூப்பினன் -(தன்னுடைய) பெரிய கைகளைக் குவித்து அஞ்சலி செய்தவாறு; அவனைத்துயில் நீக்குவான் -அந்தச் சுக்கிரீவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி;நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான் -மனத்திற்கு உகந்த நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான். கிடந்தனன்: வினைமுற்று: கிடந்தான்: வினையாலணையும் பெயர். 23 4292. | 'எந்தை! கேள்: அவ் இராமற்கு இளையவன், சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திரு முகம் தந்து அளிப்ப, தடுப்ப அரும் வேகத்தன் வந்தனன்; உன் மனக் கருத்து யாது?' என்றான். |
எந்தை கேள் -என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! அவ் இராமற்கு இளையவன் -அந்த இராமனுக்குத் தம்பியான இலக்குவன்; சிந்தையுள் நெடுஞ்சீற்றம் -மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை; திருமுகம் தந்து அளிப்ப -முகமானது எடுத்துக் காட்ட;தடுப்ப அரும் வேகத்தன் -(யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு;வந்தனன் -வந்து சேர்ந்துள்ளான்;உன் மனக் கருத்து யாது -உனது உள்ளக் கருத்து என்ன; என்றான் -என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான். எந்தை -மரூஉ. 24 4293. | இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் |
|