| நினைவு இலான், நெடுஞ் செல்வம் நெருக்கவும், நனை நறுந் துளி நஞ்சு மயக்கவும், தனை உணர்ந்திலன், மெல் அணைத் தங்கினான். |
நெடுஞ் செல்வம் நெருக்கவும் -அரசாட்சி என்னும் பெரிய செல்வம் மமதையைத் தந்தாலும்;நறு நனை துளி நஞ்சு மயக்கவும்- மணமுள்ள கள்ளின் துளியாகிய நஞ்சு, மயக்கத்தை அளித்ததாலும்;தனை உணர்ந்திலன் -தன்னை உணராமையால் (அச்சுக்கிரீவன் மெய்ம மறந்து);இனைய மாற்றம் இசைத்தனன் -அங்கதன் சொன்ன வார்த்தைகள் இன்னவையென்று;என்பது ஓர் நினைவு இலான் -புரிந்து கொள்ள இயலாத மன நிலையில்;மெல் அணித் தங்கினான் -மென்மையான படுக்கையில் (முன் போலவே) கிடந்தான். தன்னையுண்டவரை அறிவில்லாதவராக ஆக்குவதால் கள்ளை 'நஞ்சு' என்றார். 'எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' (குறள்: 926). நெடுமை: பெருமை. நனி நறுந்துளி நஞ்சு - உருவகம். 25 அங்கதன் அனுமனிடம் செல்லுதல் 4294. | ஆதலால், அவ் அரசு இளங் கோள் அரி, - யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால், கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான் போதல் மேயினன் - போதகமே அனான். |
ஆதலால் -அரசாட்சிச் செருக்காலும், கள்ளின் மயக்கத்தாலும் தன்னை மறந்து சுக்கிரீவன் படுக்கையை விட்டு எழாமல் கிடக்கவே;போதகமே அனான் -யானைக் கன்று போன்றவனும்;அவ் அரசு இளங்கோளரி - இளமையான வலிய ஆண் சிங்கம் போன்றவனுமான அவ் அங்கதன்;முன் நின்று இயற்றுவது -சுக்கிரீவன் முன்னே நின்று செய்யத்தக்கது;யாதும் இன்மையால் -எதுவும் இல்லாததால்;கோது இல் சிந்தை அனுமனை - குற்றமற்ற மனத்தையுடைய அனுமனை;கூவுவான் போதல் மேயினான் - அழைப்பதற்காக (அவனிடம்) செல்ல லானான். வலிமை, துணிவு, முன்னும் பின்னும் நோக்குதல் இவற்றால் சிங்கமும், நடை, வலிமை, பெருமிதம் ஆகியவற்றால் யானையும் அங்கதனுக்கு உவமையாயின. 26 |