| | கூட்டும்'' என்று, உமைக் கொற்றவன், ''கூறிய நாள் திறம்பின், உம் நாள் திறம்பும்'' எனக் கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். |
மீட்டும் ஒன்று -மேலும் (தாரை) ஒரு வார்த்தை;விளம்புகின்றாள் - சொல்லுகின்றாள்;படை கூட்டும் என்று -சேனைகளைச் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று;உமைக் கொற்றவன் கூறிய -உங்களைப் பார்த்து வெற்றி வீரனான இராமன் குறிப்பிட்ட;நாள் திறம்பின் -தவணை நாள் தவறிவிட்டால்;உம் நாள் திறம்பும் -உங்களுடைய வாழ்நாள் அழிந்து போகும்;எனக் கேட்டிலீர் -என்று (நான் பலமுறை) சொல்லியும் (அதற்கு ஏற்றவாறு) நடக்காமல் போய் வீட்டீர்கள்;இனிக் காண்டிர் -இனிமேல் (அதன் விளைவை) அனுபவத்தால் தெரிந்து கொள்வீர்கள்;கிடைத்திர் - (இப்பொழுது குற்றத்திலே) அகப்பட்டுக் கொண்டீர்கள். நாள் - வாழ்நாள். இப்பாடலால் தாரை முன்பே பலமுறை எச்சரித்திருக்கிறாள் என்பதுபுலப்படுகிறது. 29 | 4298. | 'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற் கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர் போலுமால், உம் புறத்து இருப்பார்! இது சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம். |
வாலி ஆர் உயிர் -வாலியின் அரிய உயிரை;காலனும் வாங்க - யமனும் கவர்ந்து செல்லுமாறு;விற்கோலி -வில்லை வளைத்து (அம்பு தொடுத்து);வாலிய செல்வம் -புகழ் மிக்க அரசாட்சிச் செல் வத்தை; கொடுத்தவர் -(உங்களுக்குத்) தந்தவர்களாகிய இராமனும் இலக்குவனுமா; உம் புறத்து இருப்பார் போலும் -கிட்கிந்தைக்கு வெளியே சும்மா இருப்பார்கள்;இது உங்கள் தன்மையினோர்க்கு எலாம் சாலும் -(பேருதவி செய்தவர்களை) இப்படிப் புறக்கணிப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருந்தியது தான். 'பேருதவி செய்தவரும், பேராற்றலுடையவருமானவரை எவ்வளவு மேலாகப் போற்ற வேண்டும்? அதைவிட்டு அவரிடத்திலும் தவறாக நடந்தால் பொறுத்துக் கொண்டிருப்பார்களா?'' என்றாள் தாரை. ''நீங்கள் தவறு செய்தமையால் அவர்கள் சினம் பொங்கப் பெற்று நீங்கள் அழியுமாறு மோதப் போகிறார்கள்; இந்தத் தண்டனை உங்களுக்குப் பொருத்தமானதே'' என்பதாம். போலும் - ஒப்பில் போலி. வாலிய செல்வம் - வாலியினுடைய செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். வாலியார் - இதனை உயர்வுப் பன்மையாகவும் கொள்ள இடமுண்டு. 30 |