பக்கம் எண் :

434கிட்கிந்தா காண்டம்

4299.'தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்
;அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

     தேவி நீங்க -(தன்) மனைவியான சீதை பிரிந்திருக்க;அத் தேவ ரின்
சீரியோன் -
(அத்துயரத்தால்) தேவர்களைக் காட்டிலும் சிறப்புள்ளவனான
அந்த இராமன்;ஆவி நீங்கினன் போல் அயர்வான் -உயிர் நீங்கியவன்
போலத் தளர்ந்துள்ளான்;அது பாவியாது  -அதை (நீங்கள்) மனத்தில்
கருதிப் பார்க்காமல்;நும் நாள் காவி மலர்க் கண்ணியர் -காலை பூத்த
கருங் குவளை போன்ற கண்களையுடைய உங்கள் மனைவியரின்;காதல் நீர்
-
அன்பு வழிப்பட்ட இன்பத் தேனை;பருகுதிர் போலும் -குடித்து
மகிழ்கின்றீர் போலும்!

     சிற்றின்ப வயப்பட்டுக் கடமையை மறந்த சுக்கிரீவனது செயலை
மனத்திற் கொண்டு தாரை இவ்வாறு பேசலானாள் என்பது.                  31

4300.'திறம்பினீர் மெய்;
      சிதைத்தீர் உதவியை;
நிறம் பொலீர்; உங்கள்
      தீவினை நேர்ந்ததால்,
மறம் செய்வான் உறின்,
      மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்?'
      என்கின்ற போதின்வாய்,

     மெய் திறம்பினீர் -சத்தியம் தவறிவிட்டீர்கள்;உதவியைச் சிதைத்
தீர்-
(இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்;நிறம் பொலீர் -குணத்தால்
பொல்லாதவர்கள் ஆனீர்கள்;உங்கள் தீவினை நேர்ந்ததால் -உங்களது
பாவச் செயல் பயன்தர வந்ததால்;மறம் செய்வான் உறின் -(அந்த வீரர்
உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால்;மாளுதிர் -(அவரால்)
மடிவீர்கள்;இனிப் புறம் செய்து -இனி மேற்கொண்டு என்ன செய்தும்;
ஆவது என் -
அதனால் விளையக் கூடிய பயன் யாது;என்கின்ற போதின்
வாய் -
என்று (அங்கதன் முதலோரைத் தாரை) கண்டித்துப் பேசும்
சமயத்தில். . . .

     நிறம் பொல்லீர் (பொலீர்); நிறம் - குணம். திறம்புதல்: மாறுபடுதல். 32

வாயிலைத் தாளிட்டு வானரங்கள் போருக்குத் தயாராதல்

4301.கோள் உறுத்தற்கு அரிய குரக்கினம்,
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்