பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 435

 தாள்உறுத்தி, தட வரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின, மொய்ம்பினால்,

     கோள் உறுத்தற்கு -தடுத்து நிறுத்துவதற்கு;அரிய குரக்கினம் -
அரிய (வலிமையுள்ள) குரங்குகளின் கூட்டம்;நீள் எழுத் தொடரும் -
நீளமான உழலை மரக்கட்டைகளை உடைய;நெடு வாயிலை -பெரிய
நகரத்தின் வாயிற் கதவை;தாள் உறுத்தி -உள்ளே தாளிட்டு;
மொய்ம்பினால் -
வலிமையால்;தடவரை தந்தன மூளுறுத்தி -பெரிய
பாறைகளைக் கொண்டு வந்து சேர்த்து;அடுக்கின -(ஒன்றன் மேல் ஒன்றாக
அக் கதவோடு சார்த்தி உள்ளே) அடுக்கி  வைத்தன.

     குரங்குகள், கதவை எளிதில் திறக்க முடியாதபடி பெரிய பாறைகளைக்
கொண்டுவந்து அடுக்கி வைத்தன என்பது.  குரங்குகள் மூன்று வகைப்
பாதுகாப்பைச் செய்தன. 1. வாயிற் கதவைச் சாத்தி உள்ளே தாளிடுதல்.  2.
உழலை பாய்ச்சுதல்.  3. பெரும் பாறைகளை அடுக்கி வைத்தல்.  வாயில் -
ஆகுபெயர். தாள் உறுத்துதல் - தாழ்ககோலையிறுக்குதல்.            33

4302.சிக்குறக் கடை சேமித்த செய்கைய,
தொக்குறுத்த மரத்த, துவன்றின;
'புக்கு உறுக்கிப் புடைத்தும்' என, புறம்
மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன.

     கடை சிக்குற -(இவ்வாறு) நகர வாயிலை உறுதியாக;சேமித்த
செய்கைய -
பத்திரப்படுத்திக் கொண்ட செய்கையுடைய வானரங்கள்;புக்கு
உறுக்கி -
(இவ் வாயிலைக் கடந்து இலக்குவன் வந்தால்) எதிரே சென்று
(அவனை) அச்சுறுத்தி (அதட்டி);புடைத்தும் என -நையப் புடைப்போம்
என்று எண்ணி;தொக்குறுத்த மரத்த -(முறித்துக் கையில்) எடுத்துக்
கொண்ட மரங்களையுடையனவும்;வெற்பும் இறுத்தன -பெரிய
பாறைகளையும் பேர்த்து எடுத்துக் கொண்டனவுமாம்;துவன்றின -(திரண்டு)
நெருங்கி;புறம் மிக்கு இறுத்தன -மதில் பக்கத்தில் கூட்டமாகக் கூடி
நின்றன.

     சேமித்தல் - காவல் செய்து வைத்தல். தொக்குறுத்தல் - தொகுத்தல்,
ஈட்டுதல். இறுத்தல் - தங்குதல்.                                    34

இலக்குவன் சினத்தின் விளைவு

4303.'காக்கவோ கருத்து?' என்று, கதத்தினால்
பூக்க மூரல், புரவலர் புங்கவன்,
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்,
நூக்கினான் அக் கதவினை, நொய்தினின்.

     (வானரங்கள் நகர வாயிலை அடைத்ததைப் பார்த்து) புரவலர்
புங்கவன்-
அரசரில் மேம்பட்டவனான இலக்குவன்;காக்கவோ கருத்து
என்று -
(என்னிடமிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளவோ