பக்கம் எண் :

436கிட்கிந்தா காண்டம்

(இவர்கள்) கருதியது என்று எண்ணி;கதத்தினால் மூரல் பூக்க -
கடுங்கோபத்தால் எள்ளற் சிரிப்புத் தோன்ற;தாக்கணங்கு உறை -திருமகள்
வசிக்கின்ற;தாமரைத் தாளினால் -செந்தாமரை போன்ற தன் திருவடியால்;
அக் கதவினை -
அவ் வாயிற் கதவை;நொய்தி னில் நூக்கினான் -மிக
எளிமையாகத் தள்ளினான்.

     இலக்குவனின் திருவடிக்கு இலக்குமி உறையும் தாமரை உவமையாகியது.
அணங்கு - மகளிரில் சிறந்தவர், பெண் தெய்வம் 'அறம் செய்வோர்பால்
அருளினால் பற்றியிருக்கும் திருமகள்' என்று தாக்கு அணங்கு என்பதற்குக்
கம்பன் கழகப் பதிப்பு விளக்கம் தருகிறது.  தாக்குதல் - பற்றியிருத்தல்.   35

4304.காவல் மா மதிலும், கதவும், கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்,
தேவு சேவடி தீண்டலும், தீண்ட அரும்
பாவம் ஆம் என, பற்று அழிந்து இற்றவால்.

     கதவும் -அந்த வாயிற் கதவும்;கடி மேவும் -காவல் அமைந்த;
வாயில் அடுக்கிய -
வாயிலில் (வானரங்கள்) அடுக்கி வைத்திருந்த;
வெற்பொடும் -
பெரிய பாறைகளோடு;காவல் மா மதிலும் -(வாயிலைச்
சார்ந்து) கட்டுக் காவல் சூழ்ந்துள்ள பெரிய மதிலும்;தேவு சேவடி தீண்டலும்
-
தெய்வத்தின் சிவந்த திருவடி பட்ட அளவில்;தீண்ட அரும் -தீர்த்தறகு
அரிய;பாவம் ஆம் என -இழிவான தீவினைகளைப் போல;பற்று அழிந்து
இற்ற -
பற்றுக் கோடு இல்லாமல் முழுவதும் அழிந்துவிட்டன.

     இலக்குவனின் திருவடி பட்ட அளவிலே வாயில் கதவு முதலியன
அழிந்து போனதற்குத் தெய்வத் திருவடியின் தொடர்பால் அடியார்க்குக்
கொடிய வினைக் கட்டுக்கள் பற்றற அழிவதை உவமையாக்கினார்.
உவமையணி. 'சிந்திப்பரியன்' எனத் தொடங்கும் திருவையாற்றுப் பதிகத்தில்,
'பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன அந்திப் பிறையணிந்து ஆடும் ஐயாறன்
அடித்தலமே' என அப்பர் திருவாக்கில் இக்கருத்து அமைந்துள்ளமை காண்க.
தீண்டலும், தீண்டரும் - முரண் தொடை தீண்ட அரும் தீண்டரும் (அகரம்
தொக்கது).                                                   36

குரங்குகள் அஞ்சி ஓடுதல்

4305. நொய்தின் நோன் கதவும், முது வாயிலும்,
செய்த கல் மதிலும், திசை, யோசனை
ஐ - இரண்டின் அளவு அடி அற்று உக,
வெய்தின் நின்ற குரங்கும், வெருக் கொளா,

     நோன் கதவும் -வலிய அக் கதவும்;முது வாயிலும் -பழமையான
அந்த நகரவாயிலும்;கல் செய்த மதிலும் -கற்களால் எழுப்பப் பட்ட
மதிலும்;நொய்தின் அடி அற்று -எளிதிலே கட்டுக் குலைந்து;திசை
ஐஇரண்டு யோசனையின் அளவு -
எல்லாத் திசைகளிலும் பத்து யோசனை
தூரம்;உக குரங்கும் -சிதறியதால் (போர் செய்ய நின்ற)