வானரங்களும்;வெருக் கொளா -அச்சங் கொண்டு;வெய்தின் நின்ற - (மனங் கொதித்துத்) தவித்தன. வெய்தின் நிற்றல்: கொடிய துன்பம் அடைதல். யோசனை - ஓர் எல்லையளவு. 3, 71/2, கல் தொலைவு என்பர். வெருங் கொளா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். நோன்மை: வலிமை. 37 | 4306. | பரிய மா மதிலும், படல் வாயிலும் சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை நெரிய, நெஞ்சு பிளகக, நெடுந் திசை இரியலுற்றன; இற்றில இன் உயிர், |
(இவ்வாறு)பரிய மா மதிலும் -பருத்து உயர்ந்த அம் மதிலும்;படல் வாயிலும் -அகன்று நின்ற நகர வாயிலும்;சரிய வீழ்ந்த - சாய்ந்து விழுந்ததால் உண்டாகிய;தடித்தின் முடித்தலை நெரிய -இடியால் (தங்கள்) தலையிடம் நொறுங்கவே;நெஞ்சு பிளப்ப -(அம் மதிலைச் சார்ந்து நின்ற வானரங்கள்) நெஞ்சு உறுதியழிந்து கலங்கி;நெடுந்திசை -திசைகள் தோறும்; இரியல் உற்றன -நெடுந்தூரம் ஒடின;இன்னுயிர் இற்றில -(அதனால்) இனிய உயிர் அழியாதனவாயின. (தப்பிப் பிழைத்தன) மதில்: ஏணி கொண்டும் ஏறமுடியாத உயர்வும், புறத்தே உள்ளவர்க்குத் தோண்டமுடியாதவாறு அடி அகலமும், உள்ளே இருந்து தொழில் செய்வோர்க்குத் தலையகலமும் கொண்டிருக்கவேண்டும். இவ்வியல்புகளை உணர்த்தவே 'பரிய மா மதில்' என்றார். முடித்தலை: மதில்களின் சிகரம். உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் - (குறள் 743). 38 | 4307. | பகரவேயும் அரிது; பரிந்து எழும் புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால், சிகர மால் வரை சென்று திரிந்துழி மகர வேலையை ஒத்தது, மா நகர், |
பகரவேயும் அரிது -(குரங்குகளின் அச்சத்தால் நிகழ்ந்தவற்றைச்) சொல்வதற்கும் அரியது;பரிந்து எழு -கொடிய துன்பப்பட்டு இருப்பிடத்தை விட்டு ஓடிய;புகர் இல் வானரம் -குற்றமற்ற அக் குரங்குகள்;அஞ்சிய பூசலால் -அச்சத்தால் செய்த பேரொலியால்;மா நகர் -சிறந்த அக் கிட்கிந்தை நகரமானது;சிகர மால்வரை சென்று -சிகரங்களையுடைய பெரிய (மத்தாகிய) மந்தர மலை புகுந்து;திரிந்துழி மகர வேலையை ஒத்தது - சுழன்ற பொழுது ஆரவாரித்த மீன்களைக் கொண்ட பாற்கடலைப் போன்றது. பூசல் -ஆரவாரம். 39 | 4308. | வானரங்கள் வெருவி, மலை ஒரீஇ, கான் ஒருங்கு படர, அக் கார் வரை, |
|