பக்கம் எண் :

442கிட்கிந்தா காண்டம்

படைகளாகவும்;வெம் புருவப் போர்வில் -கொடிய புருவங்கள் போர்
செய்யும் விற்படைகளாகவும் (அமைய);மெல்லியர் வளைந்தபோது -
மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது;அப் பனையினும் உயர்ந்த
தோளான் -
பனையை விட நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன்;
பேர்க்க அரும் -
(யாராலும்) மாற்றமுடியாத;சீற்றம் பேர -கோபம் தணிய;
முகம் பெயர்ந்து -
முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக் கொண்டு;ஓதுங்கிற்று
அல்லால் -
ஒதுங்கி நின்றதேயல்லாமல்;பார்க்கவும் அஞ்சினான் -(அப்
பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான்.

     மகளிர் நேர்பட்ட மாத்திரத்தில் இலக்குவனது முகம் சினம் நீங்கி
இயல்பாக ஆனமை தோன்ற 'முகம் பெயர்ந்து' எனத் தன்வினையால்
கூறினார்.  முதல் இரண்டடிகள் - உருவக அணி.                    47

தாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல்

4316.தாமரை வதனம் சாய்த்து, தனு
      நெடுந் தரையில் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம்
      என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
      பொதுவிடைப்புகுந்து, பொன் - தோள்
தூமன நெடுங் கண் தாரை,
      நடுங்குவாள், இனைய சொன்னாள்:

     மைந்தன் -இலக்குவன்;தாமரை வதனம் சாய்த்து -தாமரை போன்ற
தனது முகத்தைச் சாய்த்துக் கொண்டு;நெடுந் தன தரையின் -கையில்
தாங்கிய நெடிய வில்லை நிலத்திலே;ஊன்றி -ஊன்ற வைத்து;மாமியர்
குழுவின் -
மாமியர் கூட்டத்தின் நடுவே;வந்தான் ஆம் என -வந்த
மருமகனைப் போல;நிற்ப -(கூச்சத்தோடு) நிற்க;பொன் தோள் -அழகிய
தோள்களையும்;தூ மனம் - தூய்மையான மணத்தையும்;நெடுங்கண்
தாரை-
நீண்ட கண்களையுமுடைய தாரை;பூமியில் அணங்கு அனார்தம்-
நிலவுலகிற்கு வந்த தேவமகளிர் போன்ற வானரப் பெண்களின்;பொதுவிடைப்
புகுந்து -
கூட்டத்திடையே புகுந்துசென்று;நடுங்குவாள் இனைய
சொன்னான் -
நடுங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொல்லத்
தொடங்கினாள்.

     அன்னியன் எதிரில் வந்து நிற்பதற்குக் கூச்சப்பட்டு மாதர்
கூட்டத்திடையே ஒதுங்கி நிற்பவளும், இலக்குவனோடு பேசுவதற்குக் கூசி
உள்ளமும் உடலும் நடுங்குபவளுமான தாரையின் குணநலம் உணர்த்தப்
பெற்றது. நடுங்குவாள்: முற்றெச்சம்; வினையாலணையும் பெயராக்கியும்
பொருள்உரைக்கலாம்.                                         48

4317.'அந்தம் இல் காலம் நோற்ற
      ஆற்றல் உண்டாயின் அன்றி,