மதயானை அனைய மைந்த -மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! உதவாமல் ஒருவன் செய்த -(தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த; உதவிக்குக் கைம்மாறு ஆக -உதவிக்கு உதவியாக;சிதையாத செருவில் -கெடுதல் இல்லாத போரில்;அன்னான்முன் சென்று -(அவனுக்குத் துணையாக) முன்னே சென்று;செறுநர் மார்பில் -(அவனுடைய) பகைவர்களின் மார்பில்; உதையானேல் -படைக்கலங்களைச் செலுத் தவில்லையென்றால்; உதையுண்டு -(அப் பகைவரின் படைக்கருவி களால் தான்) அடிபட்டு;ஆவி உலவானேல் -உயிரைப் போர்க்கவில் லையென்றால்;உலகில் மற்றும் - உலகத்தில் வேறு கைம்மாறு;உண் டாகவற்றோ -என்ன உள்ளது? (இல்லை). உதவி செய்தவனுக்காக ஒருவன் போர்க்களம் சென்று அவன் பகைவரை அழிக்கவேண்டும். அவ்வாறு பொருது அழிக்க முடியாவிட்டால் அப் பகைவரின் கையால் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும்; இவை ஒருவாறு ஈடாகலாம். இவையல்லாமல் உலகில் வேறு கைம்மாறு என்பது வேறு என்ன உள்ளது? ஒப்புமை: 'செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' (குறள்:101) உதைத்தல்: அம்பைச் செலுத்துதல். 66 | 4335. | 'ஈண்டு, இனி, நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்; வேண்டலர் அறிவரேனும், கேண்மை தீர் வினையிற்ற ஆமால்: ஆண் தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம் காண்டியால், உன்முன் வந்த கவிக்குலக் கோனொடு' என்றான். |
ஆண்தகை -ஆடவருள் சிறந்த;ஆளி மொய்ம்பின் ஐய -சிங்கம் போன்ற வலிமையோடு கூடிய தலைவனே!ஈண்டு இனி - இந்த இடத்தில் இப்போது;நிற்றல் என்பது -(மாறுபாடு கொண்டவன் போல) நிற்பது; இனியது ஓர் இயல்பிற்று அன்று -நன்மை தரும் ஒரு தன்மையுடையதாக ஆகாது;வேண்டலர் அறிவரேல்-பகைவர் அறிவாரானால்;நும் கேண்மை- உமது நட்பு;தீர் வினையிற்ற ஆம் -கெடுவதற்கான செயலாய் முடியும்; நீர் அளித்த செல்வம் -(வாலியைக் கொன்று) நீங்கள் தந்த செல்வத்தையும்; உன்முன் வந்த -உனக்கு முன்பு பிறந்தவனான;கவிக் குலக் கோனொடு - வானர குல மன்னவனாகிய சுக்கிரீவனையும்;காண்டி -(நீ) உள்ளே வந்து காண்பாயாகா;என்றான் -என்று அனுமன் கூறினான். ஓர்: அசை. 'வானரங்கள் வாயிலையடைத்துக் குன்றுகளை அடுக்கின. ஏனெனில், உனது சீற்றத்தைக் கண்டு அஞ்சியதேயாகும். ஆனால் நீ அவ்வாறு கருதாமல் உன்னோடு மாறுபாடு கொண்டு செய்ததாகக் கருதி ஓர் அன்னியன் போல இங்கே நிற்கிறாய்! இப்படி நிற்பதைப் பகைவர் பார்த்தால் உனது சீற்றத்தை மேலும் வளரச் செய்து நம் இரு திறத்தார்க்குமுள்ள நட்பைக் கெடுப்பதற்கு |