பக்கம் எண் :

458கிட்கிந்தா காண்டம்

கொண்டிருப்பது போலத் தம்பியாகக் கொண்டு;இங்க இத்துணை -இம்
மலையில் இவ்வளவு (நாள்கள் வரையில்);நெடிது வைகி -நீண்ட காலம்
தங்கி;தன்னைக் கொண்டிருந்தே -தன் உயிரை அரிதாகத் தாங்கி்க்
கொண்டு;தாழ்த்தான் -பொறுத்திருந்தான்;அன்று எனின் -
இல்லாவிட்டால்;தனு ஒன்றாலே -தன் வில்லொன்றால்;மின்னைக்
கண்டனையாள் தன்னை -
மின்னலைப் போன்ற உருவத்தைக்
கொண்டவளான சீதையை;நாடுதல் -தேடுதல்;விலக்கற் பாற்றோ -
(மற்றவரால்) தடுக்கக் கூடிய தன்மையுடையதோ? (யாராலும் தடுக்க முடியாது).

     உன்னைக் கண்டதும் உன்னிடம் அருள் உண்டாக உன்மூலமாக உன்
அரசனாகிய சுக்கிரீவனிடம் நட்புக் கொண்டு, இடருற்றபோது அவன்
உதவுவான் என்று கருதினான்; என்னிடம் மிக்க பாசம்கொண்டு என்னைப்
பாவிப்பது போன்றே அவனையும் உடன் பிறந்தவனாகப் பாவித்து உங்கள்
மூலமாக இச் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதினான்,
இராமன்.  அதனால் இதுவரை பொறுத்திருந்தான்; அவன் இவ்வாறு
பொறுத்திருந்தது உங்களுக்குப் பெருமையைத் தருவதற்கேயாம்;
வல்லமையில்லாமையாலன்று. அவன் நினைந்திருந்தால் தன் வில்லொன்றால்
பகைவரை வதைத்துச் சீதையை எளிதிலே மீட்டிருக்கமுடியும் என்று
இலக்குவன் அனுமனிடம் கூறினான் என்பது.  ஒளியினாலும் (கொடிபோல்)
ஒல்கிடும் மென்மையாலும் சீதையை 'மின்னைக் கண்டனையாள்'என்றார்.  72

4341.'ஒன்றுமோ, வானம்? அன்றி
      உலகமும் பதினால் உள்ள
வென்றிமா கடலும் ஏழ் ஏழ்
      மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின்,
      அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம்
      தாழ்வித்தல் தருமம் அன்றால்.

     வானம் ஒன்றுமோ -ஆகாயம் ஒன்று மட்டுமோ?அன்றி -அது
வல்லாமல்;பதினால் உள்ள உலகமும் -பதினான்காக உள்ளனவாகிய
உலகங்களும்;வென்றி மாக்கடல் ஏழும் -வெற்றி பொருந்திய பெரிய ஏழு
கடல்களும்;மலை ஏழும் -ஏழு மலைகளும்;உள்ள என்னவே ஆய்
நின்றது -
இருக்கின்றன என்று சொல்லுமாறு நிற்பதாகிய;ஓர்அண்டத்
துள்ளே -
ஓர் உலகமாகிய உருண்டைக்குள்ளே (ஏதாவதுஓரிடத்தில்);
எனின் -சீதை இருக்கின்றாள் என்றால்;அது நெடிது ஒன்றோ-
அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வருவது (இராமனது
வில்லுக்கு) பெரிய செயலாகுமோ?அன்று நீர் சொன்ன -(இருந்தாலும்)
முன்பு நீங்கள் சொன்ன;மாற்றம் தாழ்வித்தல் -சொல்லை நிறைவேற்றாமல்
தாமதம் செய்வது;தருமம் அன்று -(உங்களுக்குத்) தக்க செயல் (தருமம்)
ஆகாது.