பக்கம் எண் :

462கிட்கிந்தா காண்டம்

கோலமும், கற்புநிலையும் உணர்த்தப்படுகின்றன.  முத்து, நவமணிகளுள்
ஒன்றாதலால் மணி எனப்பட்டது.                                   77

அங்கதன் இலக்குவனை வணங்கிச் சுக்கிரீவனிடம் செல்லுதல்

4346. வல்ல மந்திரியரோடும், வாலி
      காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன
      அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி, 'விரைவின்
     என் வரவு, வீர!
சொல்லுதி நுந்தைக்கு' என்றான்;' 'நன்று'
      என, தொழுது போனான்.

     வாலி காதலனும் -வாலியின் மகனான அங்கதனும்;வல்ல மந்
திரியரோடும் -
நீதிமுறைகளிலும் அரசியல் நூல்களிலும் தேர்ச்சி பெற்ற
அமைச்சர்களுடன் (வந்து);மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன -
வீரனான இலக்குவனுடைய அகவிதழ் கொண்ட அழகிய செந்தாமரை
மலர்போன்ற;அடி பணிந்து -திருவடிகளில் வீழ்ந்து வணங்கி;அச்சம்
தீர்ந்தான் -
(இலக்குவனால் என்ன நேரிடுமோ என்று எண்ணிய) பயம்
நீங்கப் பெற்றான்;வில்லியும் அவனை நோக்கி -வில்வீரனான இலக்குவனும்
அந்த அங்கதனைப் பார்த்து;வீர என் வரவு -'வீரனே! எனது வருகையை;
நுந்தைக்கு விரைவின் சொல்லுதி -
உன் சிற்றப்பனாகிய சுக்கிரீவனுக்கு
விரைந்து சென்று கூறுவாய்;என்றான் -என்று மொழிந்தான் (அது கேட்டு);
நன்ற என -
நல்லது என்று சொல்லி;தொழுது போனான் -- (அவ்
இலக்குவனை) வணங்கிப் போனான்.                                78

இலக்குவன் சினத்திற்குக் காரணம் என்ன எனச்சுக்கிரீவன் வினவுதல்

4347.போனபின், தாதை கோயில் புக்கு,
      அவன் பொலம் கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும்
      தைவந்து, 'தடக் கை வீர!
மானவற்கு இளையோன் வந்து, உன்
      வாசலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலைமேலும் பெரிது;
      இது விளைந்தது' என்றான்.

     போனபின் -இலக்குவனைவிட்டு (அங்கதன்) நீங்கிச்சென்ற பிறகு;
தாதை கோயில் புக்கு -
சிற்றப்பனாகிய சுக்கிரீவனது அரண்மனைக்குள்