| | வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை'' என்ன வீங்கி, உயர்ந்தது சீற்றம்; மற்று, ஈது உற்றது செய்கை; முற்றும் நயம் தெரி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும். |
எந்தை -(அப்போது அங்கதன் சுக்கிரீவனை நோக்கி) என் தந்தையே! இயைந்த நாள் எல்லை -(படையைத் திரட்டி வருவதாக முன்பு) ஏற்றுக் கொண்ட காலத் தவணையில்;நீ சென்று எய்தலை -(படைகளோடு) இராமனிடம் நீ போய்ச் சேரவில்லை;செல்வம் எய்தி வியந்தனை -பெருஞ் செல்வத்தைப் பெற்றுச் செருக்குற்றாய்;உதவி கொன்றாய் -(அவர்கள் செய்த) பேருதவியை மறந்துவிட்டாய்;மெய் இலை -சிறிதும் உண்மையில்லாதவனாக ஆனாய்;என்னச் சீற்றம் வீங்கி உயர்ந்தது - என்பதால் (இலக்குவனுக்குக்) கோபம் மிகுதியும் மூண்டது;ஈறு உற்றது செய்கை - இதுதான் நடந்தசெயல்;நயம் தெரி அனுமன் -பக்குவம் அறிந்த அனுமன்;வேண்ட -வேண்டிக் கொண்டதால்;நம்மை இன்னும் நல்கினன் -(அந்த இலக்குவன்) நம்மை இன்னும் உயிரோடு இருக்குமாறு அருள்புரிந்துள்ளான். அனுமன் இலக்குவனை வேண்டியிராவிடில் அப்போதே நாம் அனைவரும் இலக்குவனால் கொல்லப்பட்டிருப்போம் என்றவாறு. முற்றும் நயம்தெரி அனுமன் - முன்பு தாரையைக் கொண்டு இலக்குவனது சினத்தைத் தணித்துப் பின்னர் இனிய சொற்களால் வேண்டிக் கொண்டதைக் குறித்தது. நயம் - பக்குவம். 81 | 4350. | 'வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப் பொருகின்ற நகர வாயில் பொற் கதவு அடைத்து, கற் குன்று அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும் தெரிகின்ற சினத்தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். |
வானர வீரர் -வானர வீரர்கள்;வருகின்ற வேகம் நோக்கி - இலக்குவன் வரும் வேகத்தைப் பார்த்து;வானைப் பொருகின்ற - வானத்தைச் சென்று தொடுகின்ற;நகர வாயில் -(கிட்கிந்தா) நகரத்தின் வாயிலில் உள்ள;பொன் கதவு அடைத்து -பொன்னாலாகிய கதவுகளைச் சாத்திக் கொண்டு;அருகு ஒன்றும் இல்லா வண்ணம் -பக்கத்தில் ஒரு சிறு குன்றுகூட இல்லாதபடி;கற்குன்று வாங்கினர் அடுக்கி -கல் மலைகளையெல்லாம் எடுத்துவந்து (அவ் வாயிலில்) |