பக்கம் எண் :

486கிட்கிந்தா காண்டம்

ஆம் - வானர குலத்துப் பிறந்த எங்களைப் போன்றவர்க்கே பொருந்தும்;
எனா -
என்று கூறி;மேல்நிலை அழிந்து -உடம்பு நிலை குலைந்து;உயிர்
விம்மினான் -
உயிர் வருந்தினான்.

     இலக்குவன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் ஆற்றாது உடல்தளர்ந்து
உயிர் வருந்தினான் என்பது.  மானவத் தலைமகன் - சான்றோர் தலைவன்
எனினுமாம்.  மேல் என்பது புறவுடலாம்; உடல் எழில் குலைதலும் மனம்
நோதலும் ஆகும். மேல் என்னும் சொல் இன்னும் தென்தமிழகத்தில் உடல்
என்ற பொருளில் வழங்குகிறது.  தென்தமிழகத்தில் மேலுக்குக் குளிச்சிட்டு
வரேன் என்று பேசுதல்கண்கூடு.                                  116

அனுமனைச் சேனையுடன் வருமாறு ஏவிச் சுக்கிரீவன்
இராமனிடம்செல்லுதல்

4385.எழுந்தனன் பொருக்கென,
      இரவி காண்முளை;
விழுந்த கண்ணீரினன்,
      வெறுத்த வாழ்வினன்,
அழிந்த அயர் சிந்தையன்,
     அனுமற்கு, ஆண்டு, ஒன்று
மொழிந்தனன், வரன்முறை
      போதல் முன்னுவான்.

     இரவி கான்முனை -சூரிய குமாரனான சுக்கிரீவன்;பொருக்கென
எழுந்தனன் -
விரைவாக எழுந்தான்;விழுந்த கண் நீரினன் -பெருகும்
கண்ணீரையுடையவனும்;வெறுத்த வாழ்வினன் -செல்வ வாழ்க்கையை
வெறுத்தவனும்;அழிந்து அயர் சிந்தையன்- வருந்தித் தளரும்
மனமுடையவனுமாகி;வரன் முறை போதல் முன்னுவான் -இராமனிடம்
முறைப்படி செல்ல எண்ணியவனாய்;ஆண்டு -அப்பொழுது;அனுமற்கு -
அனுமனிடம்;ஒன்று மொழிந்தனன் -ஒரு சொல் சொன்னான்.

     கான் முளை - ஒரு வம்சத்தில் தோன்றியவன்.  கால் - வமிசம்.
விழுந்த கண்ணீர், வெறுத்த வாழ்வு என்று எச்சங்களையடுக்கியதால்
சுக்கிரீவன் விழிகளில் பிறரின் துயரம் கண்டு பொறாததால் தானாகப் பெருகிய
கண்ணீரும், உண்மையாகவே வாழ்வில் ஏற்பட்ட வருத்தமும் கண்டு
தெளியலாம்.                                                 117

4386.'போயின தூதரின் புகுதும் சேனையை,
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என,
ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா,
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான்

     நெறி வலோய் -(சுக்கிரீவன் அனுமனைப் பார்த்து) நீதி நெறிகளில்
வல்லவனே;போயின தூதரின் -(முன்பு கட்டளையிட்ட படி)