ஒன்பதினாயிர கோடி யூகம் -ஒன்பதினாயிரங் கோடிக் குரக்குச் சேனைகள்;தன் முன்செல பின்செல மருங்க மொய்ப்புற -தனக்கு முன்னும் பின்னும் இருபக்கமும் நெருங்கி வரவும்;மன் பெருங் கிளைஞரும் -மிகச் சிறந்த உறவினர்களாகிய வானரங்களும்;மருங்கு சுற்றுற -அருகில் சூழ்ந்து வரவும்;மின் பொரு பூணினான் -மின்னல் போன்ற ஒளி விடுகின்ற அணிகளை அணிந்த சுக்கிரீவன்;செல்லும் வேலையில் -(இராமன் இருக்கும் இடத்திற்குப்) போகும் சமயத்தில். . . பின்செல மருங்கு மொய்ப்புற என்ற சொற்போக்கினால் சுக்கிரீவனுடன் சென்ற பெரும் பரிவாரத்தின் இயல்பு புலனாகும். மருங்கு - பக்கம், மேல் யூகம் - குரக்குப் படை. 120 4389. | கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின் இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின; தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி; பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. |
கொடி வனம் மிடைந்தன - கொடிகளின் தொகுதிகள் அடர்ந்து நிறைந்தன;குமுறும் பேரியின் -முழங்குகின்ற பேரிகைக் கருவிகளின்; இடிவனம் மிடைந்தன- இடி போன்ற ஒலித் தொகுதிகள் நிறைந்தன; பணிலம் ஏங்கின -சங்குகள் ஒலித்தன;தயங்கு பூண் ஒளி -விளங்கு கின்ற அணிகளின் ஒளியாகிய;தடி வனம் மிடைந்தன -மின்னலின் தொகுதிகள் நிறைந்தன;பொடி வனம் எழுந்தன -(பூமியிலிருந்து) புழுதித் தொகுதிகள் கிளம்பின;வானம் போர்த்த -இவையெல்லாம் வானத்தை அளாவி மூடின. வனம் - இங்கே தொகுதி, மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது. மிடைந்தன என்ற ஒரு சொல் பொருளில் பல முறை வந்தது. தடி - மின்னல்; தடித் என்ற வடசொல்லின் விகாரம் என்பர். 121 4390. | பொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின், மின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின், பின்னின; விசும்பினும் பெரிய; பெட்புறத் துன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. |
பொன்னினின் -பொன்னாலும்;முத்தினின் -முத்துக்களாலும்;புனை மெல்தூசினின் -அழகிய மெல்லிய ஆடைகளாலும்; |