பக்கம் எண் :

508கிட்கிந்தா காண்டம்

4422.கறங்கு போல்வன, காற்றினும்
      கூற்றினும் கடிய,
பிறங்கு தெண் திரைக்
      கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது
      கோடி எண் வகுத்த,
திறம் கொள், வெஞ் சினப்
      படைகொடு, - குமுதனும் - சேர்ந்தான்.

     குமுதனும் -குமுதன் என்னும் வீரனும்;கறங்கு போல்வன -காற்றாடி
போல விரைந்து செல்வனவும்;காற்றினும் கூற்றினும் கடிய -காற்றைக்
காட்டிலும் வேகம் உடையனவும், யமனைவிடக் கொடு மையுடையனவும்;
பிறங்கு தெண்திரை -
விளங்குகின்ற தெளிவான அலைகளையுடைய;கடல்
புடை பெயர்ந்து எனப் பெயர்வ -
கடல் இடம் விட்டு எழுந்தது போன்று
செல்வனவும்;மறம் கொள் வானரம் -வீரம் கொண்ட வானரங்கள்;ஒன்பது
கோடி எண் வகுத்த -
ஒன்பது கோடியென்று கணக்கிடப்பட்டனவும்;திறம்
கோள் வெம்சினப் படை கொடு -
மனவலியும் உடல் வன்மையும்
கடுமையான கோபமும் கொண்டனவுமான படைகளை உடன் கொண்டு;
சேர்ந்தான் -
வந்து சேர்ந்தான்.

     கறங்கு - காற்றாடி; வானத்தில் சுழன்று செல்வதெனக் காரணக்
குறியாயிற்று.  கடிய - இரட்டுறமொழிதல்: காற்றினும் கூடிய கூற்றினும் கடிய
என வேகத்தையும் கொடுமையையும் குறித்தவாறு.                  16

4423. ஏழின் ஏழு நூறாயிர
      கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள்
      கிளர் படை கொண்டு, பரவை
ஊழி பேரினும் உலைவில,
     உலகினில் உயர்ந்த
பூமி விண் புக, - பதுமுகன்
      என்பவன் - புகுந்தான்.  *

     ஊழி பரவை பேரினும் -உலக முடிவுக் காலத்தில் கடல் பொங்கி(த்
தனது நிலையைவிட்டு)ப் பெயர்ந்து வந்தாலும்;உலைவு இல -
அழிவற்றனவாகிய;ஏழின் ஏழு நூறு ஆயிர கோடி என்று இசைந்த -
நாற்பத் தொன்பதினாயிரங் கோடி என்ற கணக்கோடு பொருந்திய;பாழி நல்
நெடுந்தோள் -
வலிமை மிக்க அழகிய நீண்ட தோள்களோடு விளங்குகின்ற;
கிளர் படை கொண்டு -
வானரப் படையை உடன் கொண்டு;உலகினில்
உயர்ந்த பூமி -
பூமியிலிருந்து மேலே எழுந்த