பக்கம் எண் :

தானை காண் படலம் 509

புழுதி;விண் புக -ஆகாயத்திற்குச் செல்லும்படி;பதுமுகன் என்பவன் -
பதுமுகன் என்னும் தலைவன்;புகுந்தான் -வந்துசேர்ந்தான்.

     ஏழின் ஏழு - பண்புத் தொகை: ஏழினால் பெருக்கிய ஏழு
(நாற்பத்தொன்பது). உம்மைத் தொகையாகக் கொள்ளின் ஏழும் ஏழும் -
ஏழொடு சேர்ந்த ஏழு - (பதினான்கு) எனப் பொருள்படும்.             17

4424. ஏழும் ஏழும் என்று
      உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும், தாழ்வு இலாத்
      தட வரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலி
      கொள் தொள்ளாயிரக்கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும், -
      இடபனும் - படர்ந்தான்.   *

     இடபனும் -இடபன் என்னும் வீரனும்;ஏழும் ஏழும் என்று
உரைக்கின்ற -
பதினான்கு என்று சொல்லப்பட்ட;உலகங்கள் எவையும் -
எல்லா உலகங்களும்;தாழும் காலத்தும் -அழிகின்ற ஊழிக் காலத்திலும்;
தாழ்வு இலா -
அழிவில்லாத;தடவரைக் குலங்கள்- பெரிய மலைகளின்
தொகுதிகள்;சூழும் தோற்றத்த - சூழ்ந்திருப்பது போன்ற
தோற்றமுடையனவான;வலி கொள் -வலிமையைக் கொண்டுள்ள;பாழி
வெம் புயத்து -
வன்மை மிக்க கொடிய தோள்களோடு கூடிய;
தொள்ளாயிரம் கோடி அரியொடும் -
தொள்ளாயிரங் கோடி என்று
கணக்கிட்ட வானர சேனையோடும்;படர்ந்தான் -வந்து சேர்ந்தான்.

     உலகம் யாவும் அழியும் பிரளய காலத்திலும் அழியாது நிற்கும் மலைகள்
இருப்பின், அம் மலைகளே இந்த வானர சேனைக்கு ஒப்பாகும் என்பது - இல்
பொருளுவமையணி.                                              18

4425. தீர்க்கபாதனும், வினதனும்,
      சரபனும், - திரைக்கும்
மால் கருங் கடற்கு உயர்ந்தென
      மைம் முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ண அருக் கோடி கொண்டு,
      அண்டமும் புறமும்
போர்க்கும் பூமியில் மறைதர, -
      முறையினின் புகுந்தார்.         *

     தீர்க்க பாதனும் -தீர்க்க பாதனும்;வினதனும் சரபனும் -வினதனும்
சரபனும்;திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்து என -அலையெறிகின்ற
பெரிய கரிய கடலைக் காட்டிலும் பெருந் தோற்றத்தையுடையனவான;