பக்கம் எண் :

510கிட்கிந்தா காண்டம்

ஆர்க்கும் எண்ண அரும் -எத் திறமுடையவர்க்கும்எண்ணிக்
கணக்கிடமுடியாத;மை முகத்து அனிகம் கோடி கொண்டு -
கறுத்த முகமுள்ள கோடிக் கணக்கான வானர சேனையை உடன் கொண்டு;
அண்டமும் புறமும் -
உலகவுருண்டையின் உள்ளும் புறமும்;போர்க்கும்
பூமியின் மறைதர -
மேலே எழுந்து மூடிக் கொள்ளும் புழுதியால்
மறையும்படி;முறையினில் புகுந்தார் -ஒருவர்பின் ஒருவராக வந்து
சேர்ந்தார்கள்.

     தீர்க்கபாதன்: நீண்ட காதலுடையவன். விநதன்: மிகவும்
வணக்கமுடையவன். சரபன்: சரபப் பறவை (எட்டுக்கால் புள்) போன்ற வலிமை
வாய்ந்தவன்; இவன் மேகக் கடவுளின் மைந்தன். மைம் முகத்து அனிகம்:
கருங்குரங்குகளின் படை.                                        19

4426.கை அஞ்சு ஆயுதம் உடைய
      அக் கடவுளைக் கண்டும்
மெய் அஞ்சாதவன், மாதிரம்
      சிறிது என விரிந்த,
வையம் சாய்வரத் திரிதரு
      வானர சேனை
ஐ - அஞ்சு ஆயிரகோடி கொண்டு,
      அனுமன் வந்து அடைந்தான்.

     கை அஞ்சு ஆயுதம் உடைய -கிரணங்களாகிய அஞ்சத்தக்க
ஆயுதங்களையுடைய;அக் கடவுளைக் கண்டும் -அந்தச் சூரியனைக்
கண்டுங்கூட;மெய் அஞ்சாதவன் - சிறிதும் நடுக்கம் கொள்ளாதவனான;
அனுனுன் -
அனுமன்;மாதிரம் சிறிது என விரிந்த -திக்கெல்லை
முழுவதும் அளவில் சிறிய என்று என்னுமாறு பரவியுள்ளதும்;வையம்
சாய்வரத் திரிதரு -
நிலவுலகம் ஒரு புறமாகச் சாயும்படி உலவுவதுமான;
அஞ்சு ஆயிர கோடி வானர சேனை கொண்டு -
இருபத் தையாயிரங்கோடி
எண்ணுள்ள வானரப் படையை உடன்கொண்டு; வந்து அடைந்தான் -வந்து
சேர்ந்தான்.

    அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிச்
சிறிதும் அஞ்சாது, அதைப் பிடிக்கப் பாய்ந்தவனாதலால அவனை 'அக்
கடவுளைக் கண்டு மெய் அஞ்சாதவன்' என்றார்.

     பூமியின் எந்தப் பகுதியில் இவ் வானர சேனை செல்லுகின்றதோ அந்தப்
பகுதி மிக்க பாரத்தால் சாய்வதாயற்று என்பது.

     சாய்வர; திரிதரு: வர, தரு என்பன துணை வினைகள்.            20

4427.நொய்தின் கூடிய
      சேனை, நூறாயிரகோடி
எய்த, தேவரும், 'என்கொலோ
      முடிவு?' என்பது எண்ண,