பக்கம் எண் :

தானை காண் படலம் 511

 மையல் சிந்தையால் அந்தகன்
      மறுக்குற்று மயங்க, -
தெய்வத் தச்சன் மெய்த் திரு
      நெடுங்காதலன் - சேர்ந்தான்.

     தெய்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் -தேவ சிற்பியாகிய
விசுவகர்மாவின் பிரதியுருவே எனத்தக்க அழகிய உயர்நத் மகனாகிய நளன்
என்பவன்;தேவரும் -தேவர்களும்;என்கொலோ முடிவு -இப் படையின்
எல்லையாதோ;என்பது எண்ண -என்று கருதும்படியாக;அந்தகன் மையல்
சிந்தையால் -
யமனும் இதைக் கண்டதனாலாகிய மயக்கம் கொண்ட
மனத்தால்;மயக்குற்று மயங்க -கலங்கித் திகைக்கவும்;நொய்தின் கூடிய -
விரைவில் திரண்ட;நூறாயிர கோடி சேனை எய்த -இலட்சக் கோடிக்
கணக்கான வானர சேனை தன்னோடு வர;சேர்ந்தான் -வந்தடைந்தான்.

     அந்தகன்: உயிர்களுக்கு அந்தத்தைச் செய்பவனென யமனுக்குக்
காரணக் குறி. நளன்: தெய்வத் தச்சனான விசுவகர்மாவின் மகனாய்ப் பிறந்த
ஒரு வானர வீரன்; தன் கையால நீரில் எதைப் போட்டாலும் மிதக்கும்படி
வரம் பெற்றவன்.  திரு நெடு என்றதனால் உடல்வனப்பும் உயரமும் குறிக்கப்
பெற்றன.                                                     21

4428.கும்பனும், குலச் சங்கனும்,
      முதலினர், குரங்கின்
தம் பெரும் படைத்தலைவர்கள்
      தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண்ண
      அரிது, இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய;
      மற்று உரைப்பு அரிது அளவே.

     கும்பனும் -கும்பன் என்பவனும்;குலச் சங்கனும் -சிறந்த சங் கன்
என்னும் வீரனும்;முதலினர் -முதலானவர்களாகிய;தம் பெருங் குரங்கின்
படைத்தலைவர்கள் -
தம்முடைய பெரிய வானர சேனைத் தலைவர்கள்;
தரவந்த -
தம்முடன் திரட்டிக் கொண்டு வந்த;தானை -வானர
சேனையானது;இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது -இவ்வுலக மக்களாலும்
கணக்கிட முடியாதது;இராகவன் ஆவத்து அம்பு என்னும் -இராமனின்
அம்பறாத் தூணியிலுள்ள அம்புகளின்;துணைக்கு உரிய -அளவாமென்று
சொல்லத்தக்க அளவுடையது (அல்லாமல்);அளவு மற்று உரைப்பரிது -
அந்தப் படையின் அளவைப் பற்றி வேறு எவ்வகையிலும் சொல்லுவது
அரியது.

     இராமனது அம்புப் புட்டிலில் அம்புகள் அளவில்லாது நிறைந்திருப்பது
போலக் கும்பன், சங்கன் ஆகியோரின் சேனைகளிலும் வானரங்கள் அளவற்று
நிறைந்திருந்தன.  ஆவம் - அம்புப் புட்டில், அம்பறாத்தூணி.         22