ஒரு பிடியளவாக உண்ணவும் போதாது;கண்ணின் நோக்குறின் - கண்ணால் பார்க்க வேண்டுமாயின்;கண்ணுதலானுக்கும் கதுவா -நெருப்புக் கண்ணை நெற்றியிலுடையவனாகிய சிவபெருமானாலும் காண இயலாது. இவ்வானரப் படையைப் படைத்த பிரமன் போன்ற எழுபதினாயிரம் பிரமர்கள் ஒருங்கே திரண்டு வந்தாலும் இச் சேனையை அளவிடமுடியாது. இயல்பான இரண்டு கண்களுடன் நெருப்புக் கண்ணையும் நெற்றியில் கொண்ட சிவனாலும் பார்க்கவியலாத பரப்பளவு கொண்டது அவ்வானரப்படை என்பது. 24 4431. | ஒடிக்குமேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும்; இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்; பிடிக்குமேல், பெருங் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்; குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். |
ஒடிக்குமேல் -(அவ்வானர சேனை) ஒடிக்க வேண்டும் என்று கருதினால்; வட மேருவை வேரொடும் ஒடிக்கும் -வடக்கிலுள்ள மேரு மலையையும் அடியோடு ஒடித்துவிடும்;இடிக்குமேல் -இடிக்க வேண்டுமென்று கருதினால்;நெடு வானக முகட்டையும் இடிக்கும் -பெரிய ஆகாயத்தின் மேல் முகட்டையும் இடித்து விடும்;பிடிக்குமேல் -பிடிக்க வேண்டும் என்று விரும்பினால்;பெருங் காற்றையும் -பெரிய காற் றையும்; கூற்றையும் பிடிக்கும் -யமனையும் பிடித்து விடும்;குடிக்கு மேல் -குடிக்க வேண்டும் என்று நினைத்தால்;கடல் ஏழையும் - ஏழு கடல்களையும்; குடங்கையின் குடிக்கும் -உள்ளங்கையால் அள்ளிக் குடித்து விடும். பிறர் எவராலும் செய்யமுடியாத அரிய பெரிய செயல்களையெல்லாம் எளிதில் செய்து முடிக்கும் இவ் வானரப்படை என்பது. 25 4432. | ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர், கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார், மாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர், - ஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு - எளிதின் வந்துற்றார். |
கூறு திக்கினுக்கு அப்புறம் -(எட்டாகச்) சொல்லப்படும் திசைகளுக்கு அப்பாலும்;குப்புறற்கு உரியார் -தாண்டிக் குதிக்கத்தக்க |