பக்கம் எண் :

514கிட்கிந்தா காண்டம்

வல்லமையுள்ளவர்களும்;மாறு இல் கொற்றவன் -இணையற்ற தங்கள்
அரசனான சுக்கிரீவன்;நினைத்தன முடிக்குறும் வலியர் -எண்ணிய
செயல்களை உடனே செய்து முடிக்கும் மனவுறுதியுடையவர்களுமாகிய;ஆறு
பத்து எழுகோடியாம் -
அறுபத்தேழு கோடி அளவுள்ள;வானரர்க்கு
அதிபர் -
வானர சேனைத் தலைவர்;ஊறும் இப் பெருஞ் சேனை
கொண்டு -
மேன்மேலும் பெருகுகின்ற இப் பெருஞ் சேனையைத் திரட்டிக்
கொண்டு;எளிதின் வந்துற்றார் -எளிதில் வந்து சேர்ந்தார்கள்.

     இவ்வாறு அறுபத்தேழுகோடி வானரப் படைத் தலைவர்கள் சுக்கிரீவனின்
தூதுவர் வந்து சொல்லியவுடனே தம் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்து
சேர்ந்தனர் என்பது.  குப்புறல் - குதித்தல்.                        26

படைத் தலைவர்கள் சுக்கிரீவனை வணங்குதல்

4433.ஏழு மா கடல் பரப்பினும்
      பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு,
      அவ் வீரரும் துவன்றி,
'ஆழி மா பரித்
      தேரவன் காதலன் அடிகள்
வாழி! வாழி!' என்று உரைத்து,
      அலர் தூவினா, வணங்கி.    *

     அவ்வீரரும் -அந்த வானரப் படைத் தலைவர்களும்;ஏழு மா கடல்
பரப்பினும் -
ஏழு பெரிய கடல்களின் பரப்பளவைக் காட்டிலும்;பரப்பு என
இசைப்ப -
விரிந்துள்ளது என்று கூறுமாறு;சூழும் வானரப் படையொடு -
சூழ்ந்துள்ள வானர சேனையுடனே;துவன்றி -நெருங்கிவந்து;ஆழி மா
பரித்தேரவன் காதலன் -
ஒற்றைச் சக்கரத்தையும் சிறந்த
குதிரைகளையுமுடைய தேரைச் செலுத்துபவனான சூரியன் மகனாகிய
சுக்கிரீவனுடைய;அடிகள் வாழி வாழி என்று உரைத்து -திருவடிகள்
வாழ்க வாழ்கவென வாழ்த்தி;வணங்கி -வழிபட்டு;அலர் தூவினர் -
மலர்களைத் தூவினார்கள்.

     சூரியனது தேர், காலத்தின் வடிவமான ஒற்றைச் சக்கரத்தையும் ஏழு
குதிரைகளையும் உடையது என்பது நூற் கொள்கை.

     வாழி வாழி - அடுக்கு அன்பின் மிகுதி பற்றியது.                27

இராமன் படைகளைக் காணுதல்

4434. அனையது ஆகிய சேனை
      வந்து இறுத்தலும், அருக்கன்
தனையன், நொய்தினின் தயரதன்
      புதல்வனைச் சார்ந்தான்;