இடமானதுமாகிய;பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் -பாண்டு மலை என்னும் மலை(யுள்ளது) (அதைச் சென்றடையுங்கள்.) பாண்டுமலை மிகவுயர்ந்து மிக இனிமையான இடடாயிருத்தலால் கதிரவனும் அங்கே தங்கி அப்பாற் செல்லக் கருதுகின்றான் என்பது. பருப்பதம் - பர்வதம் என்ற வடசொல் திரிபு. 20 ஆசிரிய விருத்தம் 4467. | 'முத்து ஈர்த்து, பொன் திரட்டி, மணி உருட்டி, முது நீத்தம் முன்றில் ஆயர் மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து, மான் ஈர்த்து, வருவது; யார்க்கும் புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு உதவுவது; புனிதம் ஆன அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்; அம் மலையின் அருகிற்று அம்மா! |
முது நீத்தம் -பழமையான வெள்ளமானது;முத்து ஈர்த்து - முத்துக்களை இழுத்துக் கொண்டும்;பொன் திரட்டி -பொன் துகள் களைச் சேர எடுத்துக் கொண்டும்;மணி உருட்டி -இரத்தினக் கற் களையடித்துக் கொண்டும்;ஆயர் முன்றில் மத்து ஈர்த்து -இடையர் களின் முற்றங்களிலுள்ள மத்துக்களை இழுத்துக்கொண்டும்;மரன் ஈர்த்து - மரங்களையிழுத்துக் கொண்டும்;மலை ஈர்த்து -கற்பாறைகளைப் புரட்டி இழுத்துக் கொண்டும்;மான் ஈர்த்து -மிருகங்களை இழுத்துக் கொண்டும்; வருவது -பெருகிவரும் தன்மையுடையது;யார்க்கும் -(அதில் மூழ்கிய) எல்லோர்க்கும்;புத்து ஈர்த்திட்டு -'புத்' என்னும் நரகம் வராமல் நீங்கி; அலையாமல் -எங்கும் அலைந்து திரியாமல்;புலவர் நாடு உதவுவது - தேவருலகத்தைத் தர வல்லது;புனிதம் ஆன அத் தீர்த்தம் -தூய்மையான அந்தப் புண்ணிய நீரின் பெயர்;அகல் கோதாவரி என்பர் -அகலமான கோதாவரிநதியென்று சொல்லுவர்;அம்மலையின் அருகிற்று -(அந்த நதி) அப் பாண்டு மலையின் பக்கத்தேயுள்ளது. அம்மா: வியப்பிடைச்சொல். ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான கோதாவரியின் பல சிறப்புகளையும் கூறுவது இப்பாடல். முதுநீத்தம்: பழமையும் பெருமையும் வாய்ந்ததால் 'புத்' என்பது பிள்ளைகளைப் பெறாதவர்கள் சென்றடையும் ஒரு நரகம் என்பர். முன்றில்: இலக்கணப் போலி. 'ஈர்த்து' என்ற சொல் ஒரு பொருளிலே பலமுறை வந்தது: சொற்பொருள் பின்வருநிலையணி. 21 4468. | 'அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே எனத் தெளிந்த அருளின் ஆறும், |
|