பக்கம் எண் :

நாட விட்ட படலம் 535

பெண்களால் வீசப்பட்ட கவண்கயிற்றிலிருந்து வெளிப்படும் கற்கள்;
வெயில் இயங்கும் கன வரையும் -
வெயிலைக் கக்குகின்ற பெரிய
மலையையும்;சந்திர காந்தகமும் - சந்திரகாந்த மலையையும்;காண்பீர் -
பார்ப்பீர்கள்;அவண் அவை நீத்து ஏகியபின் -அங்குள்ள அம்மலைகளை
விட்டு அப்பாலே சென்ற பிறகு;அகல்நாடு பல கடந்தால் -அகன்ற
நாடுகள் பலவற்றைத் தாண்டிச் சென்றதால்;அனந்தன் என்பான் -
ஆதிசேடன்;உவணபதிக்கு ஒளித்து உறையும் -பறவைகளுக்கு
அரசனாகிய கருடனுக்கு அஞ்சி மறைந்து வாழுகின்ற;கொங்கணமும் -
கொங்கணதேசத்தையும்;குலிந்தமும் - குலிந்த தேசத்தையும்;சென்று
உறுதிர் -
போய்ச் சேர்வீர்கள்.

     மாது, ஓ: அசைகள்.

     சூரிய காந்தகம் - சூரியன் கதிர்தோன்ற எரிந்து காட்டும் ஒரு கல்.  இது
போன்றே சந்திரன் ஒளியால் நீராக உருகும் கல் சந்திரகாந்தக்கல்.

     தினை முதலியவற்றின் கதிர்களைக் கிளி முதலான பறவைகள்
உண்ணாதவாறு வேட்டுவ மாதர்கள் அருகில் அமைக்கப்பட்ட பரண்களில்
காவலாக இருந்து அங்குள்ள கற்களையெடுத்துக் கவண்கயிறு கொண்டு வீசிப்
பறவைகளையோட்டுவர்.  உவணபதி: இருபெயரொட்டு. உவணன்: அழகிய
சிறகுகளையுடையவன் என்று பொருள்படும்.                        23

4470.'   ''அரன் அதிகன்; உலகு அளந்த அரி  அதிகன்''
      என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல்,
      புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச்
      சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
      நெடு மலையை வணங்கி, அப்பால்.

     அரன் அதிகன் -சிவபிரானே சிறந்த கடவுள்;உலகு அளந்த அரி
அதிகன் -
உலகங்களை (த்தன் திருவடிகளால்) அளவிட்ட திருமாலே சிறந்த
கடவுள்;என்று உரைக்கும் -என்று கூறும்;அறிவு இலோர்க்கு -தத்துவ
அறிவு இல்லாத மூடர்களுக்கு;பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல்
-
மேலான கதியைச் சென்று அடைவதற்கு அரிய தன்மைபோல;புகல் அரிய
பண்பிற்கு ஆம் -
புகுதற்கரிய தன்மை பெற்றதும்;சுரநதியின் அயலது -
ஆகாயகங்கையின் அருகில் உள்ளதும்;வான் தோய் குடுமிச் சுடர்
தொகைய -
வானத்தையளாவிய தன் சிகரங்களில் (கதிர் மதியாகிய) இரண்டு
சுடர்களும் சேரக் கூடியதும்;தொழுதோர்க்கு எல்லாம் -தன்னை
வணங்கியவர் எல்லோர்க்கும்;அதிகம் வரன் தரும் தகைய -சிறந்த
வரங்களைக் கொடுக்கும் பெருமையுடையதுமான;அருந்ததி ஆம் நெடு
மலையை -
அருந்த தியென்னும் பெரிய மலையை;வணங்கி -(நீங்கள்
சென்று) தொழுது;அப்பால் -அதன் பிறகு. . . .