பக்கம் எண் :

நாட விட்ட படலம் 557

4499.'வள்ளை, கத்திரிகை வாம மயிர்
      வினைக் கருவி என்ன,
பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர்
      உரைக்கின் பித்து ஆம்;
வெள்ளி வெண் தோடு செய்த
      விழுத் தவம் விளைந்தது என்றே
உள்ளுதி; உலகுக்கு எல்லாம்
      உவமைக்கும், உவமை உண்டோ?

     வள்ளை -(பெண்களின் காதுகளுக்கு) வள்ளைக் கொடியின் இலையும்;
கத்தரிகை -
கத்திரிக் கோலும்;வாம மயிர் வினைக்கருவி -அழகிய மயிர்
நீக்கும் கருவியும்;என்ன -என்று;பிள்ளைகள் உரைத்த ஒப்பை - அறிவு
நிரம்பாதவர்கள் சொல்லிய உவமைகளை;பெரியவர் -அறிவு முதிர்ந்த
சான்றோர்;உரைக்கின் -(சீதையின் காதுகளுக்கு உவமைகளாகச்)
சொன்னால்;பித்து ஆம் -(அது) பித்தம் பிடித்தவர் சொல்லாகும் (சிறிதும்
பொருந்தாது);வெள்ளி வெண்தோடு -(அவள் அணிந்துள்ள) வெள்ளி
போன்ற வெண்ணிறமான தோடு என்னும் காதணி;செய்த -முன்பு செய்த;
விழுத் தவம் விளைந்தது என்றே -
சிறந்த தவமே (சீதையின் செவிகளாக)
வந்தது என்றே;உள்ளுதி -நினைவாய்;உலகுக்கெல்லாம் -உலகிலுள்ள
பொருள்களுக்கெல்லாம்;உவமைக்கும் -உவமையாகச் சொல்லுதற்குரிய
ஒன்றுக்கும்;உவமை உண்டோ -வேறு ஓர் உவமைப் பொருள்
கிடைக்குமோ?

     சீதையின் காதுகள் உலகிலுள்ள அழகிய பெண்களின் காதுகளுக்கும்
தாம் உவமையாகுமாறு அழகு மிகுந்திருப்பதால், அவற்றிற்கு வேறு ஓர்
உவமானப் பொருள் இல்லை என்பது. பிள்ளைகள்: இளமைத் தன்மையர்;
அறிவு நிரம்பாதவர்கள். வள்ளை - முதலாகு பெயர். வேற்றுப்பொருள்
வைப்பணி.                                                  53

4500.'பெரிய ஆய், பரவை ஒவ்வா;
      பிறிது ஒன்று நினைந்து பேச
உரிய ஆய், ஒருவர் உள்ளத்து
      ஒடுங்குவ அல்ல; உண்மை
தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,
      தேவர்க்கும் தேவன் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும்,
      வாள் தடங் கண்கள் அம்மா!

     தேவர்க்கும் தேவன் என்ன -தேவர்களுக்கெல்லாம் தேவனான
திருமாலைப் போன்று;கரிய ஆய் -கருமையாகியும்;வெளிய ஆகும் -
வெண்மையாகியுமுள்ள;வாள் தடங் கண்கள் -ஒளி பொருந்திய பெரிய
கண்கள்;உண்மை தெரிய -(அவற்றின்) உண்மையான தன்மை