தெரியும் படி;ஆயிரங் கால் நோக்கின் -ஆயிரந் தடவை பார்த்தாலும்; பெரிய ஆய், பரவை ஒவ்வா -மிகவும் அகன்றதாய்க் கடலையும் உவமையாக ஏற்காவாம் (கடலினு பெரியன);பிறிது ஒன்று நினைந்து பேச - வேறு ஓர் உவமானப் பொருளை ஆராய்ந்து கூறுவதற்கு;உரிய ஆய் - தகுந்தனவாகி;ஒருவர் உள்ளத்து -ஒருவரது மனத்திற்குள்;ஒடுங்குவ அல்ல -அடங்கும் இயல்புடையன அல்ல. (அம்மா-வியப்பிடைச் சொல்) சீதையின் கண்கள் மிகப் பெரியனவாயிருத்தலால் அவற்றின் தன்மையை உள்ளத்தினால் ஊன்றியுணர்வதற்கு ஒருவராலும் இயலாது என்பது. சீதையின் கருவிழிகள் திருமால் போலக் கறுத்தும், அக கருவிழிகளைச் சுற்றிலுமுள்ள பகுதிகள் அத்திருமால் பள்ளி கொள்ளும் பாற்கடல்போல வெளுத்தும் இருக்கும் என்பது. கரியவாய் வெளியவாகும்: தொடைமுரண். 54 | 4501. | 'கேள் ஒக்கும் அன்றி, ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே; கோள் ஒக்கும்என்னின் அல்லால், குறி ஒக்கக் கூறாலாமே? வாள் ஒக்கும் வடிக் கணாள்தன் புருவத்துக்கு உவமை வைக்கின், தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அனங்க சாபம். |
வாள் ஒக்கும் -வாள் போன்ற;வடிக் கணாள்தன் புருவத்துக்கு - கூர்மையான விழிகளையுடைய சீதையின் புருவங்களுக்கு;உவமை வைக்கின் -உவமையெடுத்துப் பொருந்திப் பார்த்தால்;கேள் ஒக்கும் அன்றி -உறவாக அமைந்த அவை தாங்களே ஒன்றுக் கொன்ற உவ மையாகுமே அல்லாமல்; ஒன்று -வேறொரு பொருளை;கிளத்தினால் -உவமையாகக் கூறினால்; கீழ்மைத்து ஆம் -இழிந்த உவமையேயாகும் (மற்றும்);கோள் ஒக்கும் என்னின் அல்லால் -(பொதுவாகப் பெண்களின் புருவத்திற்கு உவமையாகும் பொருளையெடுத்துத் தன்) மனப் போக்கிற்குப் பொருந்தியுள்ளது என்று (சீதையின் புருவங்களுக்கு) உவமானமாகக் கூறினால் கூறலாமேயல்லாமல்;குறி ஒக்கக் கூறலாமே -உவமைக் கருத்துப் பொருந்தக் கூற முடியுமோ? (முடியாது);தாள் ஒக்க வளைந்து நிற்ப -(மன்மதன் வில்லை உவமை கூறலாமென்றால்) இரண்டு முனையும் பொருந்துமாறு வளைந்து நிற்பனவாகிய; இரண்டு அளங்க சாபம் -மன்மதனுடைய இரண்டு விற்கள்;இல்லை - உலகத்தில் இல்லை (ஆதலால், அதுவும் உவமை கூறப் பொருந்தாது). சீதையின் புருவங்கள் தம்மில் ஒன்றையொன்று ஒக்குமேயல்லாமல் வேறு ஓர் உவமைப் பொருளைப் பெறமாட்டா; ஒரு கால் ஏதாவது உவமானப் பொருளை என மனப்போக்கின்படி கூறுகின்றேன் என்று கூறலாமேயல்லாமல் |