பக்கம் எண் :

56கிட்கிந்தா காண்டம்

தோள்களை உடைய;வென்றி மாருதி - வெற்றிமிக்க அனுமன்;பதுமச்
செங்கண் ஆழியாய் -
'செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையும்
ஆணைச் சக்கரமும் உடையவனே! அடியனேனும் - அடியனாகிய யானும்;
அரிக்குலத்து ஒருவன் -
குரங்குக் குலத்தில் தோன்றிய ஒருவனே யாவேன்;
என்றான் -
என்று கூறினான்.

     நால்வகை வருணத்தோருள் அந்தணர் உயர்ந்தோராகக் கருதப்பட்டதால்
அந்தணனாகிய அனுமன் அரசனாகிய தன்னை வணங்குதல் தகாது; தருமம்
ஆகாது என்றனன் இராமன். அனுமன் அந்தணன் வேடத்தில் இருந்தமையால்
இராமன் இங்ஙனம் கூறினான்.

     கேள்வி நூல் - வேதம்; சுருதி. செவி வழியாக மட்டும் கேட்கப்படுதலின்
வேதத்தைக் கேள்வி நூல் என்பது  பழ மரபு.  கேட்டற்கரிய நூற்பொருளைக்
கற்றறிந்தார் வழிக்கேட்டலும் ஆம். 'கற்றிலனாயினும் கேட்க' என்றார்
வள்ளுவரும். (குறள். 414). மறை - வேதம். மருத்துவின் மகனாதலின் 'மாருதி'
என்பது அனுமன் பெயராயிற்று. ஆழியாய் - ஆணைச் சக்கரம் உடையவனே
என்பது பொருள். தயரத சக்கரவர்த்தியின் மகனாதலின் காடாளும் இராமனை
இங்ஙனம் அனுமன் விளித்தான்.  அடியேன் தானும் - உம்மை இறந்தது
தழீஇய எச்ச உம்மை. சுக்கிரீவனே அன்றி யானும் எனப் பொருள்படும். ஆல்
- அசை.                                                      30

அனுமன் தன் பெரிய வானர உருவத்துடன் நிற்றல்

3781.மின்உருக் கொண்ட வில்லோர்
     வியப்புற, வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை
     ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு,
     புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக்கொண்டு நின்றான்,
     தருமத்தின் தனிமை தீர்ப்பான்.

     தருமத்தின் தனிமை தீர்ப்பான்- (துணையின்றி வருந்தும்) தருமத்தின்
தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன்;மின் உருக் கொண்ட -
மின்னலின் வடிவத்தைத் தன்பால் கொண்டாற்போன்ற ஒளிபொருந்திய;
வில்லோர் வியப்புற-
வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு;வேத
நல்நூல் -
வேதம் முதலான சாத்திரங்களே;பின் உருக் கொண்டது
என்னும் -
பின்னர் ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று;பெருமை ஆம்
பொருளும் தாழ -
சிறப்பித்துச் சொல்லும் பாராட்டுரையும் சிறுமையுறும்படி;
பொன் உருக் கொண்ட மேரு -
பொன் மயமான வடிவங் கொண்ட
மேருமலையும்;புயத்திற்கு உவமை போதா - தன் தோள்களுக்கு
உவமையில் ஒப்பாகாத;தன் உருவக்கொண்டு நின்றான் - தன்னுடைய
பேருருவத்தைக் கொண்டு நின்றான்.

     'இவர்களோ தருமம் ஆவார்' (3762) என்ற தொடர்களில் இராமலக்குவர்
குறிக்கப்பட்டனர்.  அவர்களின் தனிமை தீர்ப்பவன் ஆதலின், அனுமன் தரு