ஐயா -ஐயா!பற்றி நோக்கின் -ஆராய்ந்துபார்த்தால்;மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் -பெண்களுக்காகக் (அங்க இலக்கண நூலில்) கூறியுள்ள உத்தமவிலக்கணங்கள்;வண்ண வாசப் பங்கயத்த வட்கும் - மணமுள்ள அழகிய தாமரை மலரில் வாழ்பவளான திரு மகளுக்கும்;நிரம்பல -நிரம்ப அமையவில்லை;செங்கயல் கருங்கண் -கயல்மீன்போன்ற அழகிய கருவிழிகளைக் கொண்ட கண்களையும்;செவ் வாய் -சிவந்த வாயையுமுடைய;தேவரும் வணங்கும் -தேவரும் வணங்குதற்கேற்ற சிறப்பு வாய்ந்த;தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு -தெய்வத் தன்மை கொண்ட முலைகளோடு கூடிய அந்தக் குயில் போன்ற சீதைக்கு;ஒன்றும் குறைவு இலை -(உத்தமவிலக் கணங்களில்) ஒன்றாவது குறைவுபடவில்லை;குறியும் அஃதே -(நீ அவளை அறிவதற்கு) அடையாளமும் அதுவே. சீதை திருமகளைவிட நல்லிலக்கணம் நிரம்பியவள் என்பதாம். நல்லிலக்கணங்களில் ஒன்றும் குறைவில்லாமல் அவ்விலக்கணம் முழுவதும் நிரம்பியிருத்தலால் சீதை 'தேவரும் வணங்குத் தெய்வக் குயில்' எனப்பட்டாள். செங்கயல் கருங்கண் செவ்வாய்: முரண் தொடை. குயில் - உவமவாகுபெயர். பங்கயத்தவட்கும். தேவரும்: உயர்வுசிறப்பும்மைகள். 61 4508. | 'குழல் படைத்து, யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி மழலையும் பிறவும் தந்து, வடித்ததை, மலரின் மேலான், இழை பொரும் இடையினாள்தன் இன் சொற்கள் இயையச் செய்தான்; பிழை இலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்? |
குழல் படைத்து -வேய்ங்குழலையுண்டாக்கியும்;யாழைச் செய்து - யாழ்க் கருவியை வகுத்தமைத்தும்;குயிலொடு கிளியும் கூட்டி -குயிலையும் கிளியையும் படைத்தும்;மழலையும் பிறவும் தந்து -(எழுத்து நிரம்பாத) மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை இயற்றியும்;வடித்ததை -பழகித் தேர்ந்த நயத்தை;மலரின் மேலான் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் (பின்பு);இழை பொரும் இடையினாள்தன் -நூலிழையோடு மாறுபடுகின்ற நுண்ணிய இடையையுடைய சீதையின்;இன் சொற்கள் இயையச் செய்தான் -இனிய சொற்களுக்கும் பொருந்துமாறு அமைத்தான்;பிழை இலது -(ஆனால் அச்சொற்களுக்குக்) குற்றமற்ற;உவமை காட்டப் பெற்றிலன் -உவமைப் பொருள் எதையும் உண்டாக்கவில்லை;இன்னும் பெறும் கொல் -இனிமேலாவது (அவன்) படைப்பானோ? (அறியாம்). பிரமன் சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில் வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே அச்சீதையின் சொற்களைப் |