பயம் நீங்கியவர்களாய்;அம்மலை ஏறினார் - அந்த மலையில் ஏறினார்கள். அந்த மலையே இராவணனிருக்கையெனத் தெளிந்து சீதையைக் காண்பது உறுதியென மனத்தில் கருதியவராய், அத் தேவியைக் கண்டு அச்செய்தியை இராமனிடம் அறிவித்து அவனது மனத் துயரத்தைப் போக்குவோமென எண்ணினார் வானரர். இராவணனையும் எதிர்க்க நேரிடினும் கலங்கமாட்டார்கள் என்று குறிப்பாராய் 'அச்சம் நீங்கினார்' என்றார். 17 | 4538. | இரிந்தன, கரிகளும் யாளி ஈட்டமும்; விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின; திரிந்தனர், எங்கணும் திருவைக் காண்கிலார், பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என, |
(அவ்வாறு மலைமேல் ஏறிய வானரர்களைக் கண்டு)கரிகளும் - யானைகளும்;யாளி ஈட்டமும் -யாளிகளின் கூட்டமும்;இரிந்தன -(பயந்து) விலகியோடின;விரிந்த கோள் அரிகளும் -(அம்மலை மேல்) பரந்திருந்த கொல்லுமியல்புள்ள சிங்கங்களும்;வெருவி நீங்கின -அஞ்சி நிலைகெட்டு அகன்றன; (அவ்வானரர்கள்) எங்கணும்திரிந் தனர் -மலை முழுவதும் தேடிப் பார்த்தவர்களாகி;திருவைக் காண்கிலார் -சீதையைக் காணாதவராகி (அதனால்);பரிந்தன சிந்தனை -மனம் நொந்தவர்களாய்;பரிகின்றாம் என -(இப்பொழுது) மிக வருந்துகின்றோம் என்று (நைந்து). அடுத்த பாடலில் 'தேடினார்' என முடியும். கோள் அரி : சிங்கம்; பிறவற்றின் உயிரைக் கொள்வது. 18 சீதையைக் காணாமல் இறங்குதல் | 4539. | ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று, உம்பரைத் தொடுவது ஒத்து, உயர்வின் ஓங்கிய, செம் பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார்; கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார். |
(வானரர்கள்) ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று-நூறு காத அளவு அகலமுடையதாய்;உம்பரைத் தொடுவது ஒத்து -வானத்தைத் தீண்டுவது போன்று;உயர்வின் ஓங்கிய -மிகவும் உயர்ந்துள்ள;செம்பொன் நல்கிரியை -செம்பொன் மயமான அழகிய அந்த ஏமகூட மலையில்;ஓர் பகலில் தேடினார் -ஒரு பகல் முழுவதும் தேடிப் பார்த்தனர்;கொம்பினைக் கண்டிலர் -(ஆனால்) பூங்கொம்பு |