பக்கம் எண் :

590கிட்கிந்தா காண்டம்

4548.எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்;
இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள்,
முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார்.  *

     (அவர்கள்) எழுகிலர் -(அப்பாலே செல்ல) எழுந்து புறப்படாமலும்;
கால் எடுத்து ஏகும் எண்இலர் -
அடிவைத்துச் செல்லும் கருத்தில்லாமலும்;
வழி உளது ஆம் எனும் -
அப்பாலே செல்லுவதற்குரிய வழியுள்ளது
என்னும்;உணர்வு மாற்றினார் -உணர்வையும் மாற்றிக் கொண்டவர்களாய்;
இழுகிய நெய் எனும் -
விழுதாக உறைந்த நெய் போன்ற;இருட்
பிழம்பினுள் -
இருளின் தொகுதியில்;முழுகிய -மூழ்கி விட்ட;மெய்யர்
ஆய் -
உடம்பையுடைவர்களாய்; (ஒருவர்க்கொருவர் இருப்பிடம் அறிந்து
கொள்ள முடியாமல்);உயிர்ப்பு முட்டினார் -(மனத்துயராலும் அச்சத்தாலும்)
பெருமூச்செறிந்தார்கள்.

     வானரவீரர் இருட்பிழம்பினுள் அகப்பட்டுக் கொண்டதால் மேற்கொண்டு
செய்யும் செயலில் நாட்டமில்லாது ஒருவரையொருவர் காணமுடியாது
திகைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் என்பது. உயிர்ப்பு முட்டுதல் :
மூச்சுமுட்டுதல் என்பது வழக்கு.                                     28

வானரர் வேண்டிக் கொண்டபடி,
அனுமன் அவர்களைக் கொண்டு செல்லுதல்

4549. நின்றனர், செய்வது ஓர்
      நிலைமை ஓர்கிலர்,
'பொன்றினம் யாம்' எனப்
      பொருமும் புந்தியர்,
'வன் திறல் மாருதி!
      வல்லையோ எமை
இன்று இது காக்க?'
      என்று, இரந்து கூறினார்.

     செய்வது ஓர் நிலைமை -(அனுமனைத் தவிர மற்றைய வானர
வீரர்கள்) இன்னது செய்யவேண்டும் என்ற செயலையும்;ஓர்கிலர் நின்றனர் -
உணரமாட்டாது நின்றவர்களாய்;பொன்றினம் யாம் என -இறந்துவிட்டோம்
நாம் என்று;பொருமும் புந்தியர் -வருந்துகின்ற மனமுடையவர்களுமாகி;
வன்திறல் மாருதி -
(அனுமனை நோக்கி) மிக்க வலிமையுடைய அனுமானே!
இன்று -
இப்பொழுது;எமை இது காக்க வல்லையோ -எங்களை
இத்துயரத்திலிருந்து காப்பதற்கு வல்ல மையுடையையோ என்று முறையிட்டு;
இரந்து கூறினார் -
வேண்டிக் கொண்டார்கள்.

     இருள் தொகுதியில் அகப்பட்டுக் கொண்ட அந்த வானரவீரர் தம்மை
இறந்து போனவர்களாகவே கருதி வருத்தமுற்று அனுமனை விளித்து, 'இன்று