எங்களை இத் துயரத்திலிருந்து காக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டனர் என்பது. புந்தி: எண்ணம். ஓர்கலர்: முற்றெச்சம். அல் - எதிர்மறை இடைநிலை. 29 | 4550. | 'உய்வுறுத்துவென்; மனம் உலையிர்; ஊழின் வால் மெய்யுறப் பற்றுதிர்; விடுகிலீர்' என, ஐயன், அக் கணத்தினில், அகலும் நீள் நெறி கையினில் தடவி, வெங் காலின் ஏகினான். |
உய்வுறுத்துவென் -(மாருதி மற்றவர்களைப் பார்த்து) நீங்கள் பிழைக்க (வேண்டியன) செய்வேன்;மனம் உலையிர் -உள்ளம் வருந்த வேண்டா; ஊழின் -முறையாக (ஒருவர்பின் ஒருவராக நின்று);வால் மெய்யுறப் பற்றுதிர் -(எனது) வாலை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்;விடுகிலீர் என -அதனை விட்டு விடாதீர்கள் என்று கட்டளையிட்டு;அக்கணத்தினில் -(அவ் வானரர்கள் தனது வாலைப் பற்றிக் கொண்ட) அப்பொழுதே;ஐயன் -சிறந்தவனான அந்த அனுமன்;அகலும் நீள்நெறி -செல்லவேண்டிய அந்தக் குகையின் வழியில்;கையினில் தடவி -கையால் தடவிக் கொண்டு; வெங்காலின் ஏகினான் -வேகத்தையுடைய காலினால் நடந்து முன்னே சென்றான். இருட்பிழம்பில் திசை தெரியாமல் திகைத்துத் தம்மைக் காக்குமாறு வேண்டிய வானரர்களுக்கு அனுமன் அபயமளித்துத் தனது நீண்ட வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுக் கைகளால் தடவிக் கொண்டு காலால் முன்னே நடந்து சென்றான் என்பது. காலின் : காற்றுப்போல விரைந்து என்றும் பொருள் கொள்ளலாம். இருளாதலால் அனுமன் தடவிச் சென்றான் என்றார். 30 | 4551. | பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன், மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட, துன் இருள் தொலைந்திட, துரிதத்து ஏகினான் - பொன் நெடுங் கிரி எனப் பொலிந்த தோளினான். |
நெடும் பொன்கிரி என -உயர்ந்த மேருமலைபோல;பொலிந்த தோளினான் -விளங்கும் தோள்களையுடைய அனுமான்;பன்னி |