ரண்டு யோசனை -பன்னிரண்டு யோசனை தூரம்;படர்ந்த மெய்யினன் - வளர்ந்த உடலையுடையவனாய்;மின் இரண்டு அனைய -(தன் காதுகளில் அணிந்துள்ள) இரண்டு மின்னற்கொடி போன்று;குண்டலங்கள் வில் இட - குண்டலங்கள் ஒளியை வீசுவதால்;துன் இருள் தொலைந்திட -அடர்ந்த இருள் அகன்றொழிய;துரிதத்து ஏகி னான் -விரைவாகச் சென்றான். அனுமன் பேருருவமெடுத்துத் தன் குண்டலங்கள் விட்டுவிட்டு ஒளி வீசுவதால் இடையிடையே இருள் விலகிச் செல்ல, அந்தக் குகையின் உட்புறத்தில் சென்றான் என்பது. அனுமன் நினைத்த உருவம் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவன்; எதிர்ப்பட்டவர்களையும் கொடிய விலங்குகளையும் அச்சுறுத்துவதற்காக அனுமன் இந்தப் பேருருவைக் கொண்டான் என்பது குறிப்பு. 'அனுமன் நிறமும் பொன்னிறம், வடிவும் பெரிது' என்பது கொண்டு மேருமலையை உவமையாக்கினார். 31 வானரர் அழகிய நகர் காணுதல் | 4552. | கண்டனர், கடி நகர்; கமலத்து ஒண் கதிர் - மண்டலம் மறைந்து உறைந்தனைய மாண்பது; விண்தலம் நாணுற விளங்குகின்றது; புண்டரிகத்தவள் வதனம் போன்றது; |
கடிநகர் கண்டனர் -(அந்தப் பிலத்தின் உட்புறத்தில்) சிறந்த நகர மொன்றை வானரர் கண்டார்கள்;கமலத்து ஒண்கதிர் மண்டிலம் - தாமரையை மலரச் செய்யும் ஒளி மிக்க கதிர்களையுடைய சூரிய மண்டல மானது;மறைந்து உறைந்து அனைய மாண்பது -அந்த இடத்து வந்து மறைந்து தங்கினாற் போன்ற பெருமை வாய்ந்தது;விண்தலம் நாண் உற - வானத்திலுள்ள சொர்க்கலோகமும் வெட்கப்படுமாறு;விளங்குகின்றது - (அதைவிடச் சிறப்பாக) ஒளிபெற்று விளங்குவது;புண்டரிகத்தவள் வதனம் போன்றது -செந்தாமரை மலரில் வாழ்பவளான திருமகளின் முகத்தையொத்து விளங்குவது. பிலத்துள் இருந்த அந்த நகரம் மிகுந்த ஒளி பெற்றமையால் மறைந்துள்ள ஒரு சூரியமண்டலம் போலவும், செல்வச் சிறப்பாலும், பொன்னிறமான பொருள்களையுடைமையாலும் சுவர்க்க லோகமும் நாணுமாறு பொலிவு பெற்றும், மிக்க அழகுள்ளமையால் இலக்குமியின் முகத்தையொத்தும் விளங்கியது என்பது. 32 | 4553. | கற்பகக் கானது; கமலக் காடது; பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது; அற்புதம் அமரரும் எய்தலாவது; சிற்பமும், மயன் மனம் வருந்திச் செய்தது; |
கற்பகக் கானது -(அந்த நகரம்) கற்பகம் போன்ற மரங்களையுடையது;கமலக் காடது -(தாமரை மலர்களையுடைய) நீர்நிலையையுடையது; |