பக்கம் எண் :

600கிட்கிந்தா காண்டம்

பில நகரின் நடுவில் சுயம்பிரபை

4565. மற்றவரும் மற்று அது
      மனக் கொள வலித்தார்;
உற்றனர், புரத்தின் இடை;
      ஒண் சுடரினுள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு
      நண்ணி, ஒளி பெற்ற
கற்றை விரி பொன்
      சடையினாளை எதிர் கண்டார்.

     மற்றவரும் -(அங்கதன் முதலிய) மற்றை வானர வீரர்களும்;அது
மனக் கொள -
(அனுமன் கூறிய) அந்தச் சொல் மனத்தில் பதியவே;
வலித்தார் -
(அவ்வாறே செய்ய) உறுதி கொண்டார்கள்;புரத்தின் இடை
உற்றனர் -
(யாவரும்) அந்த நகரத்தினிடையே சென்று;ஒண் சுடரினுள் -
மிக்க ஒளியையுடைய (அந்நகரின்) நடுவில்;நல்தவம் அனைத்தும் -சிறந்த
தவம் முழுவதும்;ஓர் உரு நண்ணி -ஒரு பெண்ணுருவம் பெற்றாற்போல;
ஒளி பெற்ற -
ஒளி நிறைந்த;கற்றை விரி பொன் சடையினாளை -
தொகுதியயக விரிந்த அழகிய சடையையுடையவளான சுயம்பிரபையை;எதிர்
கண்டார் -
கண்முன்னே கண்டார்கள்.

     மற்று : அசை. அந்த நகரத்தின் இடையில் தவம் ஓர் உருவம்
எடுத்துவந்தாற் போன்ற சுயம்பிரபையை வானரவீரர்கள் கண்டனர் என்பது. 45

4566.மருங்கு அலச வற்கலை
      வரிந்து, வரி வாளம்
பொரும், கலசம் ஒக்கும், முலை
      மாசு புடை பூசி,
பெருங் கலை மதித் திரு
      முகத்த பிறழ் செங் கேழ்க்
கருங் கயல்களின் பிறழ் கண்
      மூக்கின் நுதி காண,

     மருங்கு அலச வற்கலை வரிந்து -இடையிலே அலையுமாறு மர
வுரியைக் கட்டி;வரிவாளம் பொரும் -இரேகைகளையுடைய சக்கரவாகப்
பறவையைப் போன்றனவும்;கலசம் ஒக்கும் -பொற்கலசங்களை
ஒப்பனவுமான;முலை புடை மாசு பூசி -முலைகளின் மேல் அழுக்குப்
படியப்பெற்றும்;பெருங் கலைமதி திருமுகத்த -பெருமை மிக்க பதினாறு
கலைகளும் நிரம்பிய முழுமதியை யொத்த அழகிய முகத்தில்;பிறழ்
செங்கேழ் -
பிறழுகின்ற செந்நிறத்தையுடையனவும்;கருங்கயல்களின்
பிறழ்-
கருமையான கெண்டை மீன்களைப் போலப்