பக்கம் எண் :

604கிட்கிந்தா காண்டம்

யுடைக்கொடி -இத்தன்மையுடைய கொடிபோன்ற இப்பெண்;இராமன்
மனையாளோ -
இராமன் மனைவியாவாளோ? (ஆகமாட்டாள்);அக்கு
வடம்-
எலும்பு மாலையானது;முத்த மணி ஆரம் -(நவமணிகளில்
ஒன்றான)முத்தினால் ஆகிய மாலையோடு;அதன் நேர் நின்று ஒக்கும்
எனின் -
நேராக இருந்து உவமையாகுமானால்;ஒக்கும் -(இவளும்
அச்சீதையை)ஒத்திருப்பாள்;என உரைத்தான் -என்று கூறினான்.

     இராமன் தன்னிடம் கூறிய சீதையின் குணம், குறிகள் ஒன்றும் இவளிடம்
இல்லை; ஆதலால், இவள் சீதையில்லையென அனுமன் துணிந்து கூறினான்
என்பது.  எலும்பு மாலைக்கும், முத்து மாலைக்கும் எந்த அளவு
வேறுபாடுண்டோ, அந்த அளவு வேறுபாடு இவளுக்கும் சீதைக்கும்
உண்டென்பது.  அக்கு வடம்: சங்கு மணி மாலை என்றும் கொள்ளலாம்.
கொடி: உவமையாகுபெயர். இந்தப் பெண்ணும் சீதையும் ஒப்பாகார் என்பதற்கு
அக்குமாலையும் முத்துமாலையும் ஒன்றையொன்று ஒக்குமென்று கூறியதால்
பொய்த் தற்குறிப்பணி.                               51

சுயம்பிரபையின் வினாவும் வானரர் விடையும்

4572.அன்ன பொழுதின்கண் அவ்
     அணங்கும், அறிவுற்றாள்;
முன், அனையர் சேறல் முறை
      அன்று, என முனிந்தாள்;
'துன்ன அரிய பொன்
      நகரியின் உறைவிர்அல்லீர்;
என்ன வரவு? யாவர்?
     உரைசெய்க!' என இசைத்தான்.

     அன்ன பொழுதின்கண் -அச் சமயத்தில்;அவ்அணங்கும் -அந்தச்
சுயம்பிரபையும்;அறிவுற்றாள் -(யோக நிலையிலிருந்து நீங்கித்) தன் நினைவு
வரப்பெற்றாள் (அவர்களைப் பார்த்து);அனையர்  - தனக்கு எதிரில்
அவர்கள்;சேறல் முறை அன்று என -வருவது தகாது என்று; முன்
முனிந்தாள் -
உணர்ச்சி உற்றவுடன் முதலில் கோபங்கொண்டு;துன்ன அறிய
-
(நீங்கள்) எவரும் அணுக முடியாத;பொன் நகரியின் உறைவிர் அல்லீர் -
பொன்மயமான இந்த நகரத்தில் வாழ்வதற்கு உரியவராக இல்லை;வரவு
என்ன -
(நீங்கள்) இங்கு வரக் காரணம் என்ன;யாவர் -(நீங்கள்) யாவர்?
உரை செய்க என -சொல்லுங்கள் என்று;இசைத்தாள் -கேட்டாள்.

     தவம் செய்யும் பெண்ணாகிய தன்னெதிரில் ஆடவர் பலர் வந்ததால்
சுயம்பிரபை கோபித்தாள் என்பது.  அறிவுற்றாள்: தன் உணர்வு வரப்பெற்றாள்.
                                                            52

4573.'வேதனை அரக்கர் ஒரு
      மாயை விளைவித்தார்;