மகிழ்ச்சி மிகுதிக்குக் குன்று உவமை; உருவத்திற்குக் கூறப்படும் உவமை இங்கு எல்லையற்ற மகிழ்ச்சியான உணர்ச்சிக்காயிற்று. 54 இராமபிரான் பற்றிச் சுயம்பிரபை கேட்க,அனுமன் விடை பகர்தல் 4575. | 'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச் செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும், அவ் உழை, நிகழ்ந்ததனை ஆதியினொடு அந்தம், வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான். |
இராமன் -இராமபிரான்;எவ் உழை இருந்தனன் -எவ்விடத்தில் இருக்கின்றான்?என-என்று;யாணர்ச் செவ் உழை -புதுமையான அழகிய மான்போன்ற;நெடுங் கண்ணவள் -நீண்ட கண்களையுடைய அந்தச் சுயம்பிரபை;செப்பிடுதலோடும் -(அனுமனை நோக்கிக்) கேட்டவுடனே; வெவ் விழைவு இல் -கொடிய ஆசையில்லாத;சிந்தை நெடு மாருதி - மனத்தையுடைய பெருமை வாய்ந்த அனுமன்;அவ்உழை நிகழ்ந்ததனை - அங்கு (இராமனிடத்து) நிகழ்ந்த செய்திகளை;ஆதியினொடு அந்தம் விரித்தான் -முதலிலிருந்து முடிவுவரை விரித்துச் சொன்னான். ஆசையென்பது நல்வழியிற் செல்லவொட்டாது மனத்தைத் தீயவழியிற் புகுத்தலால் 'வெவ் விழைவு' எனப்பட்டது. 55 சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல் 4576. | கேட்டு, அவளும், 'என்னுடைய கேடு இல் தவம் இன்னே காட்டியது வீடு!' என விரும்பி, நனி கால் நீர் ஆட்டி, அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு ஊட்டி, மனன் உள் குளிர, இன் உரை உரைத்தான். |
கேட்டு -(அனுமன் கூறிய இராமனது வரலாறு முழுவதும்) கேட்டு; அவளும் -அந்தச் சுயம்பிரபையும்;என்னுடைய கேடுஇல் தவம் -நான் செய்த கெடுதல் இல்லாத தவம்;இன்னே வீடு காட்டியது -இப்பொழுதுதான் சாப நீக்கத்தை உண்டாக்கியது;என -என்று சொல்லி;விரும்பி -அந்த வானரவீரரிடம் அன்பு பூண்டு;கால் நீர் |