நனி ஆட்டி -அவர்களின் கால்களை நீரால் நன்கு கழுவி;அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் -தேவாமிர்தம் போன்ற சுவையுடைய இனிய உணவை; அன்போடு ஊட்டி -அன்புடன் உண்ணச் செய்து;மனன் உள் குளிர - (அவர்களது) உள்ளம் குளிரும்படி;இன் உரை உரைத்தாள் -இனிய சொற்களைச் சொன்னாள். சுயம்பிரபை அவ் வானரர்களின் காலை நீராட்டி அமுதூட்டினாள் என்பது. விருந்தினரை வரவேற்று அவர்களைத் தெய்வமெனப் பேணுதற்குச் செய்யும் சடங்கு இது. அமிழ்து போன்று இனிய அறுசுவையுண்டியென்பார் இன்னடிசில் என்றார். மோப்பக் குழையும் (90) என்ற திருக்குறள் உரைவிளக்கத்தில் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும் அவைபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்று என்பர் பரிமேலழகர். சுயம்பிரபையின் விருந்தோம்பற் பண்பினைப் பரிமேலழகர் உரையுடன் ஒப்பிட்டுணரலாம். 56 4577. | மாருதியும், மற்று அவள் மலர்ச்சரண் வணங்கி, 'யார் இந் நகருக்கு இறைவர்? யாது நின் இயற் பேர்? பார் புகழ் தவத்தினை! பணித்தருள்க!' என்றாள்; சோர்குழலும், மற்று அவனொடு, உற்றபடி சொன்னாள்; |
மாருதியும் -அனுமனும்;அவள் மலர் சரண் வணங்கி -அந்தச் சுயம்பிரபையின் தாமரைமலர் போன்ற அடியிணைகளைத் தொழுது;யார் இந்நகருக்கு இறைவர் -இந்த நகரத்துக்குத் தலைவர் யார்? நின் இயற் பேர் யாது -உனது இயற்கையான பெயர் என்ன?பார் புகழ் தவத்தினை - உலகத்தவர் புகழ்வதற்குக் காரணமான தவம் மேற்கொண்டவளே! பணித்து அருளுக -(இவற்றைச்) சொல்வாயாக;என்றான் -என்று கேட்டான்; சோர்குழலும் -(சடைபட்டுத்) தொங்கும் கூந்தலையுடைய அந்தச் சுயம்பிரபையும்;அவனோடு -அந்த அனுமனிடம்;உற்றபடி சொன்னாள் - நடந்தவற்றை நடந்தபடியே கூறலாயினாள். பணித்துஅருள்க என்ற தொடரில் அனுமனின் பணிபு புலப்படுதல் காண்க. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (125) பணிவுடையன் இன்சொலன் ஆதல் (95) என்ற குறள் தொடர்களுக்கு அனுமன் இலக்கியம் ஆவான். சோர்குழல்: வினைத் தொகையன்மொழி. 'மற்று' இரண்டும்அசைகள். 57 4578. | 'நூல்முகம் நுனித்த நெறி நூறு வர, நொய்தா மேல் முகம் நிமிர்த்து, வெயில் காலொடு விழுங்கா, |
|