| மான் முக நலத்தவன், மயன், செய்த தவத்தால், நான்முகன் அளித்துளது, இம் மா நகரம் - நல்லோய்! |
நல்லோய் -நற்பண்புள்ளவனே!மான்முக நலத்தவன் மயன் - மானின் முகம் போன்ற முகத்தையுடைய சிறந்த பண்பாளனான மயன் என்னும் அசுரத் தச்சன்;நூல்முகம் நுனித்த -யோக நூலில் நுட்பமாகக் குறித்துள்ள; நெறி நூறு வர -கணக்கற்ற வழிகள் தன்னிடம் அமையுமாறு;நொய்தா - எளிதாக;முகம் மேல் நிமிர்த்து -(தனது) முகத்தை மேலே உயர்த்தி (அண்ணாந்து வானத்தை நோக்கியபடி);வெயில் காலொடு விழுங்கா - வெயிலையும் காற்றையும் உணவாக உட்கொண்டு;செய்த தவத்தால் - கடுமையாகச் செய்த தவத்தின் பயனாக;இம்மா நகரம் -இந்தப் பெரிய நகரமானது;நான்முகன் அளித்துளது -நான்கு முகமுடைய பிரமனால் (அம்மயனுக்கு) அளிக்கப்பட்டது. இந்த நகரம் மயனது தவத்தைக் கண்டு மெச்சிய பிரமனால் அவனுக்குக் கொடுக்கப்பட்டதாகும் என்பது. வானத்தை நோக்கி முகத்தை (ஊர்த்துவ முகம்) அமைத்து, வெயிலையும் காற்றையுமே உட்கொண்டு ஒருவகை யோகத் தவம் செய்தான், மயன்; இக்கடுந்தவப் பயனாய் நான்முகனிடமிருந்து இந்நகரத்தை வரமாகப் பெற்றான். மயன்: அசுரச் சிற்பி - மானினது முகம் போன்ற முகமுடையவன். மேல்முகம் நிமிர்த்தல்:யோகமுறை. 58 4579. | 'அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர், நல் நுதலினாள் முலை நயந்தனன்; அந் நல்லாள் என் உயிர் ஆனாள்; அவளை யான், இவன் இரப்ப, பொன்னுலகின்நின்று, ஒளிர் பிலத்திடை புணர்த்தேன். |
இது அன்னது -இந்த நகரம் அவ்வாறாக அமைக்கப்பட்டது; தானவன்-அந்த மயன் என்ற அசுரத் தச்சன்;அரம்பையருள் ஓர் நல் நுதலினாள் -தேவமாதர்களுள் அழகான நெற்றியையுடைய ஒருத்தியின்; முலை நயந்தனன்-போகத்தை விரும்பினான்;அந்நல்லாள் என உயிர் அனாள் -நல்லஅழகு வாய்ந்த அவள் என் உயிர்போன்ற தோழியாவாள்; அவன் இரப்ப -அந்த அசுரன் (என்னை) மன்றாடிக் கேட்டுக் கொண்டதால்; யான் அவளை-நான் அத் தெய்வப் பெண்ணை;பொன்னுலகின் நின்று - பொன்மயமானதேவலோகத்திலிருந்து;ஒளிர் பிலத்திடை -விளங்குகின்ற இந்தப் பிலத்தில்;புணர்த்தேன் -கொண்டுவந்து சேர்த்தேன். |