பக்கம் எண் :

612கிட்கிந்தா காண்டம்

(இவையேயல்லாமல்) இன்னும் அணிகள் முதலியன யாவும் உள்ளன;
பெற்றேன் -
இவையனைத்தையும் நான் அடைந்துள்ளேன்; (என்றாலும்)
அவை முற்றும் அற விட்டு -
அவற்றைத் துய்க்காமல் எல்லாப்
பற்றுக்களையும் நீக்கி;வினை வெல்வான் -(என்) தீவினையை வெல்லும்
பொருட்டு;எண்ண அரிய பல்பகல் -எண்ணுவதற்கு அரிய நெடுங்காலமாக;
இருந்தவம் இழைத்தேன் -
பெருந்தவத்தைச் செய்தேன்.

     இன்பத்திற்குரிய பல பொருள்கள் இந் நகரில் இருந்தும், எனது சாபம்
நீங்குமாறு பல காலமாகப் பெருந்தவம் புரிந்து கொண்டிருந்தேன் என்று
சுயம்பிரபை கூறினாள் என்பது. ஓகாரம்: பிரிநிலை. அண்ணல்: அண்மைவிளி.
                                                           64

4585.'ஐ - இருபது ஓசனை
      அமைந்த பிலம், ஐயா!
மெய் உளது; மேல் உலகம்
      ஏறும் நெறி காணேன்;
உய்யும் நெறி உண்டு,
      உதவுவீர்எனின்; உபாயம்
செய்யும்வகை சிந்தையில்நினைத்திர்,
      சிறிது' என்றாள்.

     ஐயா -பெரியவனே! அமைந்த பிலம் -பொருந்திய இக் குகைத்
துவாரமானது;ஐ இருபது ஓசனை மெய் உளது -நூறு யோசனை விரிந்த
வடிவு கொண்டது;மேல் உலகம் ஏறு நெறி காணேன் -வானுலகத்திற்கு
ஏறிச் செல்லும் வழியை அறியேன்;உதவுவீர் எனின் -(நீங்கள் எனக்கு)
உதவி செய்வீர்களென்றால்;உய்யும் நெறி உண்டு -(நான்) ஈடேறுவதற்கு
வழிஏற்படும்;உபாயம் செய்யும் வகை -அதற்கான உபாயம் செய்யும்
விதத்தை;சிந்தையில் சிறிது நினைத்திர் -உங்கள் மனத்தில் சிறிது
கருதுங்கள்;என்றாள் -என்று கூறினாள் (சுயம்பிரபை).

     இந்தப் பிலம் நூறு யோசனை பரப்புள்ளதாய் இருள் அடர்ந்திருப்பதால்
மேலே ஏறிச் செல்லும்வழி இதுவென் தெரியாதபடி இந்திரனது சாபம்
என்னைத் தடை செய்கிறது; என் சாபவிடைக் காலம் குறுகி உங்கள்
வருகையால் நான் ஈடேறும் வகையும் உள்ளது.  ஆதலால், அவ்வாறான
உபாயத்தைச் செய்ய வேண்டுமென்று அனுமன் முதலியோரைச் சுயம்பிரபை
வேண்டினான் என்பது.                                         65

அனுமன் மறுமொழி

4586.அன்னது சுயம்பிரபை
      கூற, அனுமானும்
மன்னு புலன் வென்று
      வரு மாதுஅவள் மலர்த்தாள்