பக்கம் எண் :

614கிட்கிந்தா காண்டம்

அனுமனும் அதற்கு இசைந்தான் என்பது.  எங்களைப் பிலத்தில் பாதுகாத்தது
போலவே இந்தச் சுயம்பிரபையும் இப் பிலத்திலிருந்து நற்கதியடையுமாறு
பாதுகாக்க வேண்டுமென்று வானரவீரர் அனுமனை வேண்டினர் எனவும்
கூறுவர்.                                                     67

அனுமன் பேருருவம் கொண்டு, பிலத்தைப் பிளந்து, ஒங்கி நிற்றல்

4588.'நடுங்கன்மின்' எனும் சொலை
      நவின்று, நகை நாற
மடங்கலின் எழுந்து, மழை
      ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை
      திறந்து உலகொடு ஒன்ற,
வெருங் கைகள் சுமந்து, நெடு
      வான் உற நிமிர்ந்தான்.

     நடுங்கன்மின் எனும் -(அனுமன் மற்றவரை நோக்கி) அஞ்சாதீர் கள்
என்ற;சொலை நவின்று -அபயமொழியைக் கூறி;நகை நாற -புன்சிரிப்புத்
தோன்ற;மடங்கலின் எழுந்து -ஆண்சிங்கம் போலக் கிளம்பி;மழை ஏற
அரிய -
மேகங்களும் ஏறிச் செல்லமுடியாத;வானத்து உலகொடு -
(அப்பாலுள்ள) வானுலகத்தோடு;ஒடுங்கல் இல் பிலம் -குறுகல் இல்லாத
(அகன்ற) குகையானது;தலை திறந்து ஒன்ற -தலையிடம் திறந்து
ஒன்றாகிவிட;நெடுங் கைகள் சுமந்து -(தன்னுடைய)நீண்ட
கைகளையுயர்த்திக் கொண்டு;நெடு வான் உற -(தனது) பெரிய உருவம்
விரிந்த ஆகாய முழுவதும் நிறையும்படி;நிமிர்ந்தான் -மேலோங்கினான்.

     அனுமன் மற்றவர்க்கு அபயமளித்துச் சிரித்தவாறு ஆண்சிங்கம் போலக்
கிளம்பிப் பிலம் முதல் ஆகாயம்வரை ஒரேவழியாகத் திறக்குமாறு தன்
கைகளைத் தூக்கிக் கொண்டு பேருருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பது.
நாறுதல்: தோன்றுதல்.  ஆண்சிங்கம் போன்று பேருருக்கொண்டு
எழுந்ததிலிருந்து இவன் அரிய செயல்களையும் எளிதாய இயற்ற வல்லவன்
என்ற அவனது பெருமை கூறப்பெற்றது.  மடங்கல்: பிடரிமயிர் மடங்கப்
பெற்றிருப்பது என்று சிங்கத்திற்குக்காரணக்குறி.                     68

4589.எருத்து உயர் சுடர்ப் புயம்
     இரண்டும் எயிறு என்ன,
மருத்து மகன் இப்படி
      இடந்து, உற வளர்ந்தான்;
கருத்தின் நிமிர் கண்ணின்
      எதிர் கண்டவர் கலங்க,
உருத்து, உலகு எடுத்த
     கருமாவினையும் ஒத்தான்.