மருத்து மகன் -வாயு மகனான அனுமன்;எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் -பிடரியின் இருபுறமும் உயர்ந்த ஒளியையுடைய கைகள் இரண்டும்;எயிறு என்ன -இரண்டு வளைந்த தந்தம்போல விளங்க;நிமிர் கண்ணின் எதிர் -சிறந்த கண்ணெதிரே;கண்டவர் -நேரில் பார்த்தவர்; கருத்தின் கலங்க -நெஞ்சம் கலங்கும்படி;இப்படி இடந்து உற -இந்தப் பிலத்தின் மேல்தளத்தைப் பிளந்து கொண்டு;வளர்ந்தான் -உயர்ந்தவனாய்; உலகு உருத்து எடுத்து -பூமியை (அந்த நாளில்) சினங்கொண்டு (தன் கோரத் தந்தங்களால்) பாதலத்திலிருந்து தூக்கி வந்த;கரு மாவினையும் - பெரிய வடிவமுடைய கரிய வராகத்தையும்;ஒத்தான் -ஒத்து விளங்கினான். அனுமன், தன் இரு கைகளும் தந்தம் போல் விளங்க நிலத்துள்ளிருந்த பிலத்திலிருந்து பார்த்தவர் கலங்குமாறு நிலத்தைப் பிளந்து வெளிவந்த தோற்றத்தால், பாதலத்தில் அழுந்திக் கிடந்த பூமியைத் தன் கோரத் தந்தங்களால் குத்தி எடுத்துக் கொண்டு வெளிவந்த திருமாலின் வராக அவதார வடிவத்தைப் போன்றிருந்தான் என்பது. மா: விலங்கின் பொதுப்பெயர்; இங்கே வராகத்தைக் (பன்றி) குறித்தது. உருத்தல்:சினங்கொள்ளுதல். 69 4590. | மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும் தூ வடிவுடைச் சுடர் கொள் விண் தலை தொளைக்கும் மூஅடி குறித்து முறை ஈர் -அடி முடித்தான் பூ வடிவுடைப் பொரு இல் சேவடி புரைந்தான். * |
மா வடிவுடைக் கமல நான்முகன் -சிறந்த வடிவமுடைய (திருமா லின்) நாபிக் கமலத்தில் உதித்த பிரமன்; வகுக்கும் -படைத்துள்ள;தூ வடிவுடை -தூய்மையான தோற்றமுடைய;சுடர் கொள் விண் -(சூரியன் முதலிய) சுடர்களைத் தன்னிடம் கொண்ட ஆகாயத்தினது;தலை - உச்சிமுகட்டை;தொளைக்கும் -துளைத்து ஊடுருவிச் சென்றதாகிய;மூ அடி குறித்து முறை ஈர்அடி முடித்தான் -(வாமனனாகி மகாபலியிடம்) மூன்றடி மண் இரந்து பெற்று, உடனே முறையாக (வானம் பூமி என்ற இரண்டையும்) தன் இரண்டடிகளால் அளந்து நின்ற (திரிவிக்கிரமனான) திருமாலின்;பூ வடிவுடை -அழகிய வடிவையுடைய;பொருவு இல் சேவடி -ஒப்பற்ற சிவந்த திருவடிகளை;புரைந்தான் -ஒத்து விளங்கினான். இப்பாட்டில் திருமாலின் திரிவிக்கிரமாவதாரத்தை ஒப்பாகக் கூறினார். மாவலியிடம் மூவடி மண் வேண்டி ஈரடிகளால் மண்ணும் விண்ணும் அளந்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டுள்ளது. தூவடிவுடைச் சுடர்கொள்விண்: நிர்மலமானதும், சூரிய சந்திரர்களான சுடர்கள் சஞ்சரிக்கப் பெற்றதுமான ஆகாயம். புரைதல்: ஒத்தல். அனுமனுக்குத் 'திருவடி' என்ற பெயர் உண்டாதலால் இங்கு |