நீண்ட மேனியான் -திருவிக்கிரமனாய் நீண்ட வடிவெடுத்த திரு மாலின்;நெடிய தாளினின்று -பெரிய திருவடியிலிருந்து;ஈண்டு - இவ்விடத்தில்தான்;கங்கை வந்து இழிவது என்னலாம் -ஆகாய கங்கை வந்து விழுகின்றதோ என்று சொல்லும்படியாக;அம் பாண்டு மலை - அழகான பாண்டு மலையினது;படர் விசும்பினை -பரவிய ஆகாயத்தை; தீண்டுகின்ற -தொடுவதாய் உயர்ந்துள்ள;தண் சிகரம் -குளிர்ந்த சிகரத்தை; எய்தினார் -(அவ் வானர வீரர்) போய்ச் சேர்ந்தார்கள். தனது சிகரம் வானத்தில் படியுமாறு ஓங்கியுள்ள வெண்மையான பாண்டுமலை, காண்பவர்களுக்குத் திருமாலின் திருவடியிலுதித்த வெண்ணிறக் கங்கையாறு வானத்திலிருந்து இங்கேதான் இறங்குகின்றதோ என்று நினைக்குமாறு தோன்றுமென்பது. தற்குறிப்பேற்றவணி. திருமால் உலகளந்த காலத்து மேலே சத்திய லோகத்திற்குச் சென்ற அந்தப் பிரானின் திருவடியைப் பிரமன் தன் கைக் கமண்டல் நீரால் கழுவி விளக்க அந்தப் பாதப் புனிதநீரே கங்கையாகப் பெருகிற்று என்பதுவரலாறு. 24 4618. | இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா, மருள் உறுத்து, வண் சுடர் வழங்கலால், அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல் உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால். |
இருள் உறுத்து -(அந்தப் பாண்டு மலை) (உலகில்) பரவிய இருட்டைத் தாக்கியொழித்து, மீது எழுந்த -வானத்தில் தோன்றிய;தெண் நிலா -தெளிந்த ஒளியையுடைய சந்திரனுக்கு;மருள் உறுத்து -மயக்கத்தை உண்டாக்கி;வண்சுடர் வழங்கலால் -செழுமையான மிக்க ஒளியை வீசுவதால்;அருள் உறுத்திலா -(மனத்தில் சிறிதும்) அருளைக் கொள்ளாத; அடல் அரக்கன்மேல் -வலிய அரக்கனான இராவணன்மீது;உருள் உறுத்த-(அவன் கீழே விழுந்து) உருளுமாறு அழுத்திய;திண் கயிலை - வலியகயிலாய மலையை;ஒத்தது -ஒத்து விளங்கியது. ஆல்: ஈற்றசை. தன் வெண்ணிலவால் உலகத்து இருளைப் போக்கும் சந்திரனுக்கும் மயக்கத்தையுண்டர்க்குவதெனப் பாண்டு மலையின் வெண்ணிறவொளியைச் சிறப்பித்துக் கூறியது. இவ்வாறு வெள்ளொளி மிகுந்திருப்பதால் பாண்டுமலைக்குக் கைலாய மலையை உவமை கூறினார். கயிலைக்கு ஏற்றங் கூறிய ஆசிரியர் வலிய அரக்கனும், இந்தச் சரிதத் தொடர்பான கொடியவனுமான இராவணனைத் தன் கீழே கிடத்தி அழுத்திய மலையெனச் சிறப்பித்த நயங் காணலாம். 25 அறுசீர் ஆசிரிய விருத்தம் 4619. | விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி, |
|