பக்கம் எண் :

634கிட்கிந்தா காண்டம்

கூந்தலிலிருந்து நழுவி வந்து;புவனம் சேர்ந்த -பூமியையடைந்த;கோதை
போல் கிடந்த -
மலர்மாலை போல விளங்கிய;கோதாவரியினை -
கோதாவரி என்னும் ஆற்றை;குறுகிச் சென்றார் -நெருங்கிச் சேர்ந்தார்கள்.

     உயரமான இடத்திலேறிக் காண்பவர்க்கு ஆறுகள் வெண்மையான மலர்
மாலைபோலத் தோன்றுமாதலால் கோதாவரி நதியை இராவணன் சீதையைக்
கவர்ந்து செல்லும்போது அவளது கூந்தலிலிருந்து நழுவிக் கீழே விழுந்த மலர்
மாலை போலுமென்று வருணித்தார்.  ஊதை: சீறி வீசுவதால் வேகத்திற்கு
உவமை. வழீஇ: சொல்லிசையளபெடை.                            27

4621. எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற
      மண நீர் யாறு, -
தொழுகின்ற சனகன் வேள்வி
      தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு
      மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம்
      என - பொலிந்தது அன்றே.

     எழுகின்ற திரையிற்று ஆகி -மெலெழுந்து வீசியெறியும் அலை
களையுடையதாகி;இழிகின்ற -பெருகி வருகின்ற;மணி நீர் யாறு -(நீலமணி
போல) தெளிந்த நீரையுடைய அந்தக் கோதாவரி நதி;தொழு கின்ற சனகன்
-
யாவராலும் வணங்கப்படுகின்ற பெருமையுள்ள சனக மன்னன்;வேள்வி
தொடங்கி -
யாகத்தைத் தொடங்கிச் செய்யும் பொருட்டு;சுருதிச் சொல்லால்
-
வேத மந்திரங்களைச் சொல்லி;உழுகின்ற பொழுதின் -(கலப்பையால்)
உழுகின்ற காலத்தில்;ஈன்ற -உழுபடைச்சாலின் வழியே (பூமி) பெற்றெடுத்த;
ஒரு மகட்கு -
ஒப்பற்ற அந்தச் சீதைக்காக;இரங்கி -(இராவணனால்
ஏற்பட்ட துன்பத்திற்கு) மனம் வருந்தி;ஞாலம் -(அவளை ஈன்ற தாயான)
பூமிதேவி;அழுகின்ற -அழுவதாலுண்டான;கலுழிமாரி ஆம் என -
கலங்கலான கண்ணீர்ப் பெருக்கைப் போல;பொலிந்தது -விளங்கியது.

     அன்று, ஏ: ஈற்றசைகள். நிறைந்து பெருகக் கூடிய கோதாவரிநதியை பூமி
தேவி தான் பெற்ற மகளான சீதைக்கு இராவணனால் நேர்ந்த வருத்தத்திற்காக
இரக்கப்பட்டுப் பெருக்கும் கண்ணீர்போலுமென வருணித்தார்.  தன்மைத்
தற்குறிப்பேற்றவணி. சனக மன்னன் அறிவிற் சிறந்த ஞானயோகியாதலால்,
யோகியர்களும், பெரியோர்களும் தொழுவதற்குரிய சிறப்புப் பெற்றவன்;
அதனால் 'தொழுகின்ற சனகன்' எனப்பட்டான்.  யாகம் செய்பவர் முதலில்
வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு கலப்பையால் உழுது அங்கு
யாகசாலையை அமைப்பது முறையாகும். சீதை : சீதா என்னும் வடசொல்
படைச்சால் என்னும் பொருளுடையது; காரணப் பெயர்.  உழுகின்ற
கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவிமடந்தை
திருமடந்தை வெளிப்பட்டென. . . . தோன்றினாள்