பக்கம் எண் :

ஆறு செல் படலம் 635

(682) என முன்பு கூறியதை நினைவு கூர்க.  கலுழி: கலங்கல் நீர். வினை
முடிவு: யாறு பொலிந்தது என இயைத்துப் பொருள் முடிவு கொள்ள வேண்டும்.
                                                            28

4622.ஆசு இல் பேர் உலகில்
      காண்போர் அளவைநூல் எனலும் ஆகி,
காசொடு கனகம் தூவி, கவின் உறக்
      கிடந்த கான் யாறு, -
ஏசு இல் போர் அரக்கன்
      மார்பினிடை பறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக் கோள் ஈது
      என - விளங்கிற்று அன்றே.

     காசொடு கனகம் தூவி -இரத்தினங்களொடு பொன்னையும்
தன்அலைகளால் கொழித்துக் கொண்டு;கவின் உறக் கிடந்த கான் யாறு -
அழகாக ஓடிப் பல காடுகளிடையே செல்லும் அந்த கோதாவரி நதி;ஆசு
இல் பேருலகில் -
குற்றமற்ற பெரிய இந்த நிலவுலகத்தில்;காண் போர் -
அதனைக் காண்பவர்க்கு;அளவை நூல் எனலும் ஆகி -தருக்க சாத்திரம்
போல விளங்கி;எருவை வேந்தன் -கழுகுகளுக்கு அரசனான சடாயு;ஏசு
இல் போர் அரக்கன் -
பழிப்புக்கிடமில்லாத போரில் சிறந்த அரக்கனாகிய
இராவணனது;மார்பின் இடை -மார்பிலிருந்து;பறித்து வீசிய -பிடுங்கி
அலகால் வீசியெறிந்து;மீக் கோள் வடகம் ஈது என -மேலே அணியப்
பெற்ற இரத்தினமாலையோ இது என்று சொல்லத்தக்காய்;விளங்கிற்று -
விளங்கியது.

     அன்று, ஏ: ஈற்றசைகள் கோதாவரி நதி பூமியையளக்கக்கூடிய அளவை
நூல் போலவும், கழுகரசனான சடாயு, சீதையைக் கவர்ந்து சென்ற
இராவணனோடு போர் செய்கையில் அவனது மார்பிலிருந்து கழற்றியெறிந்த
முத்தாரம் போலவும் விளங்கியது என்பது, வடகம் - வடம் என்பதன் விரித்தல்
விகாரம். கோதாவரிக்குத் தருக்க நூல் உவமம்:                       29

சுவணகத் துறை கடந்து குலிந்த நாட்டைக் கடத்தல்

4623. அந் நதி முழுதும் நாடி,
      ஆய் வளை மயிலை, யாண்டும்
சந்நிதி உற்றிலாதார், நெடிது
      பின் தவிரச் சென்றார்;
'இன்ன தீதுஇலாத, தீது' என்று
      யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும்
      சுவணகத் துறையில் புக்கார்.

     இன்ன தீது இலாத -இன்னது நல்லது; (இன்ன) தீது என்று -இன்னது
கெட்டது என்று;யாவையும் எண்ணும் கோளார் -எல்லாவற்றையும்