அழகு செய்தாள் -அழகுக்கும் அழகை உண்டாக்கக் கூடியவளான சீதை; இருந்த திக்கு -இருந்த இடத்தை;உணர்ந்திலாதார் -அறிய முடியாதவர்களாய்;ஏகினார் -அந்த இடம் விட்டுச் சென்று;இடையர் மாதர் -இடைப் பெண்கள்;பெருந் ததிக்கு -(தங்களது) சிறப்பான தயிருக்கு; அருந்தேன் மாறும் -மலைவாணர் சேகரித்த அருமையான மலைத்தேனைப் பண்டமாற்றாகக் கொள்ளும்;பெருங்குன்று எய்தி யிருந்து - மரகதமலையென்னும் பெரிய மலையை அடைந்து அங்கே தங்கியிருந்து; அதில் தீர்ந்து -(அங்கும் சீதையைக் காணாமல்) அதை விட்டு நீங்கி; இறுத்த எல்லை -(தமிழ் நாட்டின்) வரையறுக்கப் பெற்ற வடக்கு எல்லையாகிய;வேங்கடத்து -திருவேங்கட மலையினிடத்து;சென்றார் - சென்று சேர்ந்தார்கள். அழகினுக்கு அழகு செய்தாள்: இயற்கையில் நற்பண்புகள் மிகுந்து நல்லிலக்கணத்தில் குறைவில்லாத தன்னை அழகு சேர்ந்திருப்பதால் தான் அந்த அழகுக்குச் சிறப்பையுண்டாக்கியிருக்கிறாள் என்பது. மரகதமலைக்குப் பக்கத்தே முல்லை நிலத்து இடைச்சியர் மரகதமலை மேலுள்ள குறிஞ்சி நிலப் பெண்களிடம் தயிரைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தேனைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதில் குறிஞ்சி, முல்லையுமாகிய இரண்டு திணை மயங்கினமை கூறியவாறு காண்க. 33 4627. | முனைவரும், மறை வலோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும், விண்ணோர் எனைவரும், அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர் அனைவரும், அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார். |
முனைவரும் -(வேங்கடமலையில்) மாமுனிவர்களும்;மறை வலோரும் -வேதமறிந்த அந்தணர்களும்;முந்தை நாள் -முற்பிறப்பிலே;சிந்தை மூண்ட -மனம் மேலிட்டுச்செய்த;வினைவரும் நெறியை மாற்றும் - தீவினைகளின் பயனாகத் தொடர்ந்து வரும் அல் வழியை மாற்றி நல்வழியில் திருப்பவல்ல;மெய் உணர்வோரும் -தத்துவ ஞானிகளும்;விண்ணோர் எனைவரும் -தேவர்கள் எல்லோரும்;அமரர் மாதர் யாவரும் -தெய்வப் பெண்0கள் யாவரும்;சித்தர் என்போர் அனைவரும் - தேவரில் ஒரு வ0கையினரான சித்தர்கள் எல்லோரும்;அருவி நல்நீர் -(அம் மலையிலுள்ள) அருவியின் தூய்மையான புண்ணிய தீர்த்தங்களில்;நாளும் - ஒவ்வொரு நாளும்;வந்து ஆடுகின்றார் -வந்து நீராடுகின்றார்கள். முனிவர் முதலான இவ்வுலகத்தவரும், தேவகணங்களாகிய மேலுலகத்தவரும் வந்து நீராடுவதற்குரிய பெருமை மிக்க அருவிகளாலாகிய பல புண்ணிய |