கடலுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில்;கனக மால் வரை -பெரிய மேரு மலைகள்;நிரை துவன்றிய என -வரிசையாய் நெருங்கி நின்றன என்று சொல்லும்படி;நெடிது இருந்தவர்க்கு -மிகுதியாக இருந்த வானர வீரர்களுக்கு;உரை செயும் பொருள் -'நான் கூறுவதற்குரிய செய்தி;உளது என -ஒன்று உண்டு' என;உணாத்தினான் -கூறலானான். ஒவ்வொரு வானரனும் மேருமலை போன்றுள்ளான் என்பது. வானரர்களைக் கனக மால்வரை நிரை துவன்றிய எனக் கூறியது இல்பொருளுவமையாம். கனகமால் வரை உருவத்தால் வானரர்க்கு உவமையாயிற்று. 6 4654. | ' ''நாடி நாம் கொணருதும், நளினத்தாளை, வான் மூடிய உலகினை முற்றும் முட்டி'' என்று ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப் பாடவம் விளம்பினம்; பழியில் மூழ்குவோம். |
நாம் -(அங்கதன் வானரர்களை நோக்கி) நாம் எல்லோரும்;வான் மூடிய உலகினை - வானத்தினால் கவியப் பட்ட உலகத்தை;முற்றும் முட்டி நாடி -முழுவதும சென்று தேடிப் பார்த்து;நளினத் தாளை -தாமரை மலரில் வாழும் திருமகளான சீதையை;கொணருதும் என்று -மீட்டு வருவதற்குரிய செய்தியைக் கொண்டு வருவோம் என்று;ஆடவர் திலகனுக்கு-ஆண்களில் திலகம் போன்ற இராமனுக்கு;அன்பினார் என -அன்புடையவர் போல;பாடவம் விளம்பினம் -நம் வல்லமையைக் கூறினோம்;பழியில் மூழ்குவாம் -ஆனால் இப்பொழுதோ நாம் தீராப்பழிக்கே உள்ளாகிவிட்டோம். சீதையைத் தேடுமாறு நம்மை அனுப்பிய காலத்தில் இராமனிடத்துப் பத்தியுடையவர்போல நடித்துச் செயலை முடித்தே தீர்வோமென்று வல்லமையாகக் கூறியது இப்போது நமது பழிப்புக்கே காரணமாம் என அங்கதன் கூறினான் என்பது. ஆடவர் திலகன்: திலகம் நெற்றிக்கு விளக்கத்தைச் செய்வதுபோல ஆடவர்களுக்கு விளக்கம் செய்பவன் இராமன் என்பது குறிப்பு. பாடவம்: வீண் பெருமை, வல்லமை. 7 4655. | ' ''செய்தும்'' என்று அமைந்தது செய்த தீர்ந்திலம்; நொய்து சென்று, உற்றது நுவலகிற்றலம்; ''எய்தும் வந்து'' என்பது ஒர் இறையும் கண்டிலம்; |
|