பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 655

 உய்தும் என்றால், இது
      ஓர் உரிமைத்து ஆகுமோ?

     செய்தும் என்று -நாம் செய்வோம் என்று;அமைந்தது -ஏற்றுக்
கொண்ட செயலை;செய்து தீர்ந்திலம் -செய்து முடித்தோமல்லோம்;
நொய்து சென்று -
(குறித்த தவணைக் காலத்திற்குள்) விரைவாகத் திரும்பிச்
சென்று;உற்றது நுவலகிற்றிலம் -நிகழ்ந்த வரலாற்றைத் தெரிவிக்கவும்
வலியற்றவரானோம்;வந்து எய்தும் என்பது -(தவணை கடந்தாலும்) காரியம்
கைகூடும் என்பதை;ஓர் இறையும் கண்டிலம் -ஒரு சிறிதும்
அறிந்தோமில்லை (இப்படியிருப்பதால்);உய்தும் என்றால் -உயிரைப்
பிடித்துக் கொண்டு நாம் வாழ்வோமென்றால்;இது  -அவ்வாறு நாம்
உயிர்வாழும் செயல்;ஓர் உரிமைத்து ஆகுமோ -மேற்கொண்ட நட்புக்குத்
தகுதியான ஒரு செயலாகுமோ? (ஆகாது).

     நாம் எண்ணிவந்த செயல் முடிவதற்கு எந்த வகையிலும் சிறிதும்
வழியில்லை; தவணைக் காலத்திற்குள் மீண்டு சென்று சேர்தலும் முடியாது;
ஆகையால் உயிர்போக்குவதே உறுதியென்று அங்கதன் அறுதியிட்டான்
என்பது.  நுவலகிற்றிலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று; கில் -
ஆற்றலையுணர்த்தும் இறந்தகால இடைநிலை.  இறை: மிகச்சிறிய.       8

4656.'எந்தையும் முனியும்; எம்
      இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச்
      செய்கை காண்குறேன்;
நுந்துவென் உயிரினை;
      நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்விர்
      ஆம்' என்றான்.

     எந்தையும் முனியும் -(செயலை முடிக்காமல் தவணை கடந்த பிறகு
மீண்டு சென்றால்) என் தந்தையான மன்னனும் நம்மைக் கோபிப்பான்;எம்
இறை இராமனும் -
நம் தலைவனான இராமனும்;சிந்தனை வருந்தும் -
மனம் வருந்துவான்;அச்செய்கை காண்குறேன் -அந்த நிகழ்ச்சிகளைக்
கண்ணால் காணும் திறமுடையவனாகேன்;உயிரினை -ஆதலால் நான்
என்னுயிரை;நுந்துவென் - வலிதில் மாய்த் துக் கொள்வேன்;நுணங்கு
கேள்வியீர் -
நுட்பமான நூற்கேள்வியுடைவர்களே! புந்தியின் உற்றது -
உங்கள் அறிவில்பட்டதை;புகல்விர் -ஆராய்ந்து கூறுவீர்;என்றான் -
என்று (அங்கதன்) சொன்னான்.

     ஆம்: அசை. சுக்கிரீவன் கடுந்தண்டனைக்கும், இராமனின் பெரு
வருத்தத்திற்கும் அஞ்சி அங்கே போகாமல் இங்கேயே உயிர்போக்குவது
நல்லது என்று எண்ணுகிறேன்; இதைக் குறித்து உங்கள் கருத்தைச்
சொல்லுங்களென்று அங்கதன்