ஆண்தகை அரசு இளங்குமர -(மேலும் சாம்பவான் அங்கதனை நோக்கி) ஆடவரிற் சிறந்த இளவரசனான அங்கதனே!மீண்டு -திரும்பிச் சென்று;இனி நாம் -இனிமேல் நாங்கள்;ஒன்று விளம்ப மிக்கது என் - சொல்லக் கூடிய செய்தி என்ன உள்ளது? (ஒன்றுமில்லை);மாண்டு உறுவது - (ஆதலால்) நாங்கள் இறந்து விடுவதே;நலம் என வலித்தனம் -நல்லதென்று உறுதி கொண்டோம்;அன்னது வேண்டலின் -அவ்வாறு இறந்து போவதை (நாங்கள்) விரும்பினபடியால்;நின் உயிர்க்கு உறுதி வேண்டும் -உனது உயிர் அழியாமல் இருக்க வேண்டும். சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டாமல் நாங்கள் மீண்டுபோய்ச் சொல்வதற்கும் ஒன்றுமில்லை; ஆதலால், நாங்கள் இறந்து விடுவதே தகுதியென்று தோன்றுகிறது; இளவரசனாயிருப்பதால் நீ உயிருடன் வாழ்வது மிக இன்றிமையாததாகுமென்று சாம்பவான் கூறினான் என்பது. ஆல்: ஈற்றசை. 11 அங்கதன் மறுமொழி | 4659. | என்று அவன் உரைத்தலும், இருந்த வாலி சேய், 'குன்று உறழ்ந்தென வளர் குவவுத் தோளினீர்! பொன்றி நீர் மடிய, யான் போவெனேல், அது நன்றதோ? உலகமும் நயக்கற்பாலதோ? |
என்று அவன் உரைத்தலும் -இவ்வாறு சாம்பவான் கூறியதும்;இருந்த வாலி சேய் -அதனைக் கேட்டிருந்த வாலி மகனான அங்கதன்;குன்று உறழ்ந்தென -மலைகள் ஒப்பானவை என்று சொல்லும்படி;வளர் குவவுத் தோளினீர் -வளர்ந்துள்ள திரண்டு தோள்களையுடையவர்களே!நீர் பொன்றி மடிய -நீங்கள் யாவரும் இங்கே இறந்தொழிய;யான் போவனேல் - நான்மட்டும் உயிரோடு தனியே திரும்பிப் போவேனானால்;அது நன்றதோ - அச் செயல் நல்லதாகுமோ?உலகமும் -உலகில் வாழும் சான்றோராலும்; நயக்கற்பாலதோ -விரும்பத் தக்கதாகுமோ? (ஆகாது). நன்றது: 'அது' பகுதிப் பொருள் விகுதி. 'நீங்கள் அனைவரும் மடிய நான் மட்டும் திரும்பிச் செல்வது நல்லதா? அதை உலகத்தவர்தான் விரும்புவார்களோ?' என்று அங்கதன் கேட்டான் என்பது. 12 | 4660. | ' ''சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர் போன்றவர் மடிதர, போந்துளான்'' என |
|