| | தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி, எம் சாகையும் உணர்த்துதி; தவிர்தி சோகம்; - போர் வாகையாய்!' என்றனன் - வரம்பு இல் ஆற்றலான். |
வரம்பு இல் ஆற்றலான் -எல்லையற்ற ஆற்றல் கொண்ட சாம்பவான் (அங்கதனை நோக்கி);போர் வகையாய் -போரில் வெற்றி வெறும் ஆற்றலுடையவனே!ஏகு நீ -நீ (உயிருடன்) போவாயாக;அவ்வழி எய்தி - (இராமனும் சுக்கிரீவனும் இருக்கின்ற) அந்த இடத்தைச் சேர்ந்து;இவ் வழி - இந்த இடமெங்கும்;தோகையைக் கண்டிலா வகையும் -மயில் போன்ற சீதையை நாம் காணமுடியாத திறத்தையும்;சொல்லி -தெரிவித்து;எம் சாகையும் உணர்த்துதி -எங்களது மரணச் செய்தியையும் தெரிவிப்பாய்; சோகம் தவிர்தி -வருந்துவதை விடு;என்றனன் -என்று கூறினான். செய் அல்லது செத்துமடி என்பது உண்மை வீரருக்கு இலக்கு; பிராட்டியின் இருப்பிடம் காணவியலாமையால் தாங்கள் உயிர்விடுதலே வீரமாகும். எனவே, 'சோகம் தவிர்தி' என்றான். சாகை - சாவு. தோகை: உவமையாகுபெயர். 18 அனுமன் கூற்று | 4666. | அவன் அவை உரைத்தபின், அனுமன் சொல்லுவான்: 'புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்; கவனம் மாண்டவர் என, கருத்திலார் என, தவன வேகத்தினீர்! சலித்திரோ?' என்றான். |
அவன் அவை உரைத்தபின் -அந்தச் சாம்பவான் அவ்வாறு உரைத்தபின்னால்;அனுமன் சொல்லுவான் -அனுமன் கூறுவான்;தவன வேகத்தினீர் -சூரியன் போன்ற வேகத்தையுடையவர்களே!புவனம் மூன்றினும் -(நாம் சீதையை) மூன்று உலகங்களிலும்;ஒரு புடையில் புக்கிலம் -ஒரு பக்கத்தில் கூட (நாம்) முழுவதும் போய்த் தேடிப் பார்க்க வில்லை (அப்படியிருக்க);கவனம் மாண்டவர் என -செல்லும் வேகம் குறைந்தவர்போலவும்;கருத்து இலார் என -(நாம் மேற்கொண்ட செயலைப் பற்றி) எண்ணிப்பார்க்கும் திறமில்லாதவர் போலவும்;சலித்திரோ - சலிப்படைந்து விட்டீரோ? என்றான் -என்று கேட்டான். |